ETV Bharat / bharat

பாகிஸ்தான் பெண்ணின் வலையில் விழுந்த சிஐஎஸ்எப் காவலர்.. ஆந்திராவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்! - Visakha City

பாகிஸ்தான் பெண்ணின் வலையில் விழுந்து இந்தியா உள்துறை ரகசியங்களை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு அனுப்பி வைத்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சி.ஐ.எஸ்.எப் காவலர் மீதான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாக்கிஸ்தானுக்கு இந்தியா உள்துறை ரகசியங்கள் வெளியாக்சிய ஐ.எஸ்.எப் கான்ஸ்டெபில்

author img

By

Published : Aug 9, 2023, 2:22 PM IST

விசாகப்பட்டினம்: குஜராத்தை சேர்ந்த கபில் குமார் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் சி.ஐ.எஸ்.எப் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் இதற்கு முன் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்டில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி விசாகா எஃகு ஆலையில் செக்யூரிட்டியாக மாற்றப்பட்டு, பின் சி.ஐ.எஸ்.எப் தீயணைப்புத் துறை காவலர் பணியில் சேர்ந்தார்.

கபில் குமாருக்கு சமூக வலைதளத்தின் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுடனான பழக்கம் ஏற்பட்டு நிர்வாணமாக விடியோ அழைப்புகளில் பேசுவது வரை சென்ற இவர்களது நட்பு சந்திப்பு வரை சென்றுள்ளது. இரண்டு வருடங்களாக கபில் அந்த பெண்ணுடன் ரகசிய தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலை தொடர, கடந்த சில நாட்களாக கபில் குமார் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சி.ஐ.எஸ்.எப் குழு கபிலை விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் கபில் தகாத முறையில் பாகிஸ்தானிய பெண் ஒருவருடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்ததது. இதன் மூலம் சந்தேகம் தீவிரம் அடைந்த அதிகாரிகள் கபில் ரகசியமாக அந்த பெண் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு நாட்டின் உள்விவகாரங்கள் தொடர்பான தகவல்களை அனுப்புவதாக சந்தேகிக்க தொடங்கினர். அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் கபில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரது செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், சில நாட்களாக சமூக வலைதளங்கள் மூலம் பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அந்த செல்போன் வாயிலாக தெரிவிக்கப்பட்டு வந்தது மத்திய உளவுத்துறைக்கு தெரியவந்தது. மேலும் அந்த செல்போன்களில் கபில் சமூக ஊடக செயலிகளில் உள்ள செய்திகளை அவசரமாக நீக்கப்பட்டதும் தெரியவந்தது. எனவே, கபிலின் தொலைபேசி தொடர்புகளை அலசுகையில் கபில் ரகசிய தகவல்கள் பகிந்த நபர் தான் என்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து, அந்த பெண் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்றும் கபிலிடம் இருந்து விசாகா எஃகு ஆலை குறித்த ரகசிய தகவல்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கசிந்திருக்கலாம் என்றும் உயர் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் தற்போது, விசாகா நகர கமிஷனர் திரிவிக்ரம வர்மா (Visakha City Commissioner Trivikramavarma) உத்தரவின் பேரில், கபில் மீது ரகசியத்தை மீறிய குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானிய இளம் பெண்ணின் மூலம் இந்திய உள்துறை விவகாரங்கள் பாகிஸ்தானிய உளவுத்துறைக்கு கைமாற்றம் செய்யப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய விவகாரங்கள் குறித்து அறிய பாக்கிஸ்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது இது முதல் முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சொகுசு காரில் சென்று திருட்டு.. ஆடு, மாடுகள் தான் டார்கெட்.. பலே திருடர்கள் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.