ETV Bharat / bharat

மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்துக்கு அனுமதி!

அமெரிக்க தயாரிப்பான மாடர்னா கரோனா தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை பிரபல மருந்து நிறுவனமான சிப்லா இறக்குமதி செய்கிறது.

Cipla gets DCGI nod to import Moderna
Cipla gets DCGI nod to import Moderna
author img

By

Published : Jun 29, 2021, 5:22 PM IST

கரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை, எனவே தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உலக அளவில் கரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. கரோனாவுக்கு எதிரான போரில் பல்வேறு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி சமீபத்தில்தான் இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. தற்போது அமெரிக்க தயாரிப்பான மாடர்னா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையம் அனுமதி வழங்கியுள்ளது. இது இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்கப்படும் 4ஆவது தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாடர்னா அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாகாணத்தில் இயங்குகிறது. பெரும்பாலான தடுப்பு மருந்து இங்குதான் உற்பத்தி செய்யப்படும். மாடர்னா தடுப்பு மருந்து உடலில் செலுத்தபட்ட 95 சதவீதம் பேருக்கு பலனளித்துள்ளது. இதன் இரு டோஸ்கள் இடையே 28 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். மாடர்னா மருந்தை -20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஆறு மாதங்கள் வரை சேமித்து வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா மூன்றாவது அலை முன்னேற்பாடு - ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.