ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் உள்ள மச்சியா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 3 ஆம் தேதி அன்று ஓக்கி எனற சினேரியஸ் கழுகு ஒன்று விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு புயல் தாக்கத்தின் போது தனது கூட்டை விட்டு பிரிந்து வழி தவறி காணாமல் போன இந்த பறவை, கன்னியாகுமரியில் கண்டறியப்பட்டதை அடுத்து, ஏர் இந்தியா விமானம் மூலம் 3ஆம் தேதி ஜெய்பூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
பயணத்திற்குப் பிறகு உடல் நிலை சீராக இருப்பதாகவும், சரணாலயத்தில் உணவுகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதனை பரிசோதித்த மருத்துவர் கூறுகையில், “நீண்ட பயணம் காரணமாக குறைந்தது 24 மணி நேரம் ஓக்கி கண்காணிப்பில் வைக்கப்படும். ஓக்கி முற்றிலும் நலமாக உள்ளது” எனறார்.
இதையடுத்து, இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் ஆராய்ச்சி அறிஞர் கூறுகையில், “சினேரியஸ் கழுகு வகைகள் எந்த மாநிலத்தில் அதிகமாக இருக்கும் எனபதை கண்டறிய ஆய்வு நடத்தப்படும். ஓக்கி சம்பந்தப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்லப்படும்” என்றார்.
இதையும் படிங்க: ஊருக்குள் புகுந்த சிறுத்தை - மடக்கிப்பிடித்த வனத்துறை