கிட்டத்தட்ட 1,800 கோடி ரூபாய் மதிப்பில் 44 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க இந்தியன் ரயில்வேஸ் ஏலம்விட்டது. சிஆர்ஆர்சி என்ற சீன நிறுவனம், பயோனியர் எலக்ட்ரிக் என்ற இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ரயில்களை தயாரிப்பதற்கான ஏலத்தை எடுக்க விண்ணப்பத்திருந்தது. இந்நிலையில், அத்திட்டத்திலிருந்து சீன நிறுவனம் நீக்கப்பட்டுள்ளது.
தற்போது, பிஎச்இஎல், மேதா சர்வோ டிரைவ்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏலத்தின் இறுதிகட்டத்தில் உள்ளன. முதல் இரண்டு ரயில்களுக்கான ஏலத்தை எடுத்த மேதா சர்வோ டிரைவ்ஸ் என்ற நிறுவனம், குறைவான விலையில் இம்முறையும் விண்ணப்பத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒப்பந்தத்தை பரிசீலனை செய்யவுள்ள இந்தியன் ரயில்வேஸ், இதுகுறித்த இறுதி முடிவை நான்கு வாரங்களுக்குள் எடுக்கவுள்ளது.
முன்னதாக, அரசின் ஒப்புந்தங்களை மற்ற நாட்டு நிறுவனங்கள் எடுக்க இந்தியாவில் பதிவு செய்வது கட்டாயமக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிஆர்ஆர்சி என்ற சீன நிறுவனம் யோனியர் எலக்ட்ரிக் என்ற இந்தியா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.