ETV Bharat / bharat

குழந்தைகள் காலை உணவை தவிர்க்க வேண்டாம் – யுனிசெப் அறிவுரை - யுனிசெப்பின் சிஏஎஸ் பயிற்சி

குழந்தைகள் காலை உணவை தவிர்க்க வேண்டாம் என யுனிசெப் நிபுணர் ஆலோசனை வழங்கியுள்ளார். குழந்தைகளின் வயிறு மிகச்சிறியது என்பதால் காலையிலேயே சரிவிகித ஊட்ட உணவு அவர்களுக்கு அவசியம் என்கிறார் யுனிசெப் அமைப்பின் குழந்தைகள் நல அலுவலரான காயத்ரி சிங்.

குழந்தைகள் காலை உணவை தவிர்க்க வேண்டாம் – யுனிசெப் எச்சரிக்கை

author img

By

Published : Oct 31, 2022, 11:48 AM IST

Updated : Nov 1, 2022, 7:59 PM IST

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற யுனிசெப் அமைப்பின் குழந்தைகள் நலன் குறித்த பயிற்சி முகாமில் 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். மருத்துவம் சார்ந்த செய்திகளில் தவறான தகவல்கள் பரவுவது அல்லது பரப்பப்படுவது குறித்தும், இவற்றை எதிர்கொள்வதில் பத்திரிகையாளர்களின் பங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஈடிவி பாரத் நெட்வொர்க்கின் தமிழ்நாடு பிரிவு ஆசிரியர் சங்கரநாராயணன் பங்கேற்றார். அப்போது தமிழக அரசின் காலை உணவுத்திட்டம் குறித்து, ஈடிவி பாரத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு செய்தித் தொகுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

இது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த யுனிசெப் அமைப்பின் குழந்தைகள் நல அதிகாரியான காயத்ரிசிங், காலை உணவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். குழந்தைகளின் வயிறு மிகவும் சிறியது, அவர்களுக்கு அவ்வப்போது, தேவையான ஊட்ட உணவுகளை வழங்குவது மிகவும் அவசியம் என்று கூறிய அவர், சத்தான காலை உணவு, கற்றல் திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறினார். தமிழக அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது எனவும் அவர் கூறினார்.

குழந்தைகள் காலை உணவை தவிர்க்க வேண்டாம் – யுனிசெப் அறிவுரை

இந்நிகழ்வில் பேசிய யுனிசெப் அமைப்பின் தகவல் தொடர்புத்துறை தலைவர் ஜஃப்ரீன் சவுத்ரி, தவறான தகவல்கள் (Misinformation) என்பது வைரசை விடவும் அதிக பரவும் தன்மை உடையது என கவலை தெரிவித்தார். பொது சுகாதாரத்திலும் தவறான தகவல்கள் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துவதாக அவர் எச்சரித்தார்.

மூத்த பத்திரிகையாளரும் முன்னாள் இந்திய பிரதமரின் ஆலோசகருமான பங்கஜ் பச்சோரி பேசுகையில், யுனிசெப்பால் நடத்தப்படும், மருத்துவ இதழியல் குறித்த விமர்சன மதிப்பீட்டு பயிற்சி முகாம், (CAS) பெருந்தொற்று காலத்தில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். இதழியல் மாணவர்களுக்கு இதனை பாடமாக சேர்க்க வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்தார்.

மருத்துவ இதழியல் குறித்த யுனிசெப்பின் சிஏஎஸ் பயிற்சி 2014ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், தாம்சன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவற்றின் மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. மவுலானா ஆசாத் தேசிய பல்கலைக் கழகம் மற்றும், இமாச்சல் பிரதேச பல்கலைக் கழகங்களும் தங்கள் பாடத்திட்டத்தில் இதனை ஏற்றுக் கொண்டுள்ளன.

கற்றலை ஊக்குவிக்கும் காலை உணவு.. களத்தில் நிகழ்த்தும் மாற்றம் என்ன?

Last Updated : Nov 1, 2022, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.