ராய்ப்பூர் / ஜாஷ்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் சிறப்புப் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மக்கள் மலைக் கோர்வாக்கள் ஆவர். அறுவடைக்குப் பின்னர் வயல்வெளிகளில் காணப்படும் எலிகளை வேட்டையாடுவது இம்மக்களின் வாழ்வாதாரமாகும்.
இந்நிலையில் எலி வேட்டைக்குச் சென்ற போது ஒரு சிறுமி எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தெரிவிப்பதாவது, ”ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பழங்குடியினர் எலி வேட்டைக்குச் சென்றுள்ளனர்.
அச்சமயத்தில் அக்குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் மண்வெட்டியை வைத்து விளையாடியதில் எதிர்பாராத விதமாக, கூர்மையான மண்வெட்டியானது மூன்று வயது சிறுமியின் கழுத்தை அறுத்துள்ளது. இதனால் அச்சிறுமி உயிரிழந்துள்ளார். பின்னர், சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது" என்றனர்.
விளையாட்டு வினையாகக்கூடும் என்னும் கூற்றுப்படி அலட்சியம் ஒரு சிறுமியின் உயிரைப் பறித்துள்ளது.
இதையும் படிங்க:Suicide Prevention: அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுப்பது எப்படி?