கவுகாத்தி : சட்டம் என்பது அனைத்து தரப்பு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக மனிதநேயத்தை தொடும் வகையில் இருக்க வேண்டும் என்றும், பிரச்சினைகளின் வேர் வரை சென்று அதற்கான தீர்வு காணும் உணர்வுகளை கொண்டு இருக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தெரிவித்தார்.
கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் 75 வது ஆண்டு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், பலதரப்பட்ட சமூகங்களின் யதார்த்தங்களை கருத்தில் கொள்ளும் வகையில் நீதித்துறை இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சட்டம் சிறந்த முறையில் விளக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் போது, சமூகக் கட்டமைப்பின் மீது மக்களும் நம்பிக்கை வைத்து, நீதியை நிலைநாட்டுவதற்கான பணிகளில் ஈடுபடுவார்கள் எனக் கூறினார். நீதித்துறை சுதந்திரமாக செயல்படும் போது, அது மக்களின் நம்பிக்கை மற்றும் உறுதித்தன்மையை பெறுகிறது என்று கூறினார்.
நீதித்துறை மீது மக்கள் கொள்ளும் நம்பிக்கை என்பது, சாமானிய மனிதர் தன் பிரச்சினையின் தொடக்கம் மற்றும் முடிவை நீதித்துறை அணுகல் மூலம் தீர்க்க நினைக்கும் எண்ணத்தின் மூலமே தீர்மானிக்கப்படுவதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். சட்டம் என்பது மனிதாபிமானத்தை தொடும் வகையில் இருக்க வேண்டும் என்றும், அனைவரின் தேவைகளையும் நிவர்த்தி செய்ய சட்டத்தில் மனித நேய தொடுதல் அவசியம் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க : இனி கிளினிக்குகளை நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது ஆயுஷ் துறை பரிந்துரை அவசியம் - சென்னை உயர் நீதிமன்றம்
நீதித் துறையின் பங்கு சட்டத்தை நிலைநாட்டுது என்றும் நிர்வாகம் நீதித் துறையை தடுக்காமல் அதை நிலைநிறுத்த உதவும் என்று தெரிவித்தார். மேலும் பிரச்சனைகளின் வேர்களைத் தீர்க்க சட்டம் எப்போதும் உணர்வுடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அது அனைத்து சமூகங்களின் உண்மைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நீதிக்கான அரசியலமைப்பு பாதை அதன் முகவரையில் பிரதிபலிப்பதாகவும் அதில் உள்ள சகோதரத்துவம், சுதந்திரம் மற்றும் சமத்துவத்தின் அளவுருக்கள் நமது தேசத்தின் ஒற்றுமை மற்றும் சமூக கட்டமைப்பின் ஸ்திரத்தன்மைக்கான உறுதியை வழங்குவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
அரசின் மூன்று கைகளான நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பொதுவான பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக அரசியலமைப்பு அரசாட்சிக்கு விவாதங்கள் மற்றும் உரையாடல்கள் தேவை, பொது நிலைப்பாடு அல்ல என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க : SRH VS LSG : ஹைதராபாத்துக்கு அதிர்ச்சி அளித்த லக்னோ! 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!