ETV Bharat / bharat

திருமண வரவேற்பின்போது கொடூரம்.. ஒரே அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த புதுமணத் தம்பதி.. போலீசாருக்கு குழப்பம்.. - புதுமணத் தம்பதி கொலை

திருமணமான மூன்று நாளில் ஒரே அறையில் புதுமணத் தம்பதி உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த புதுமணத் தம்பதி

author img

By

Published : Feb 22, 2023, 3:17 PM IST

Updated : Feb 24, 2023, 9:35 PM IST

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள சந்தோஷி நகரைச் சேர்ந்த அஸ்லாம் (24), கஹ்கஷன் (22) இருவருக்கும் பிப்ரவரி 19ஆம் தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு நேற்று (பிப்.21) மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி அஸ்லாம் வீட்டிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுமணத் தம்பதி இருவரும் ஒரே அறையில் அலங்காரம் செய்ய சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வரவில்லை.

இதனால் குடும்பத்தார் கதவை தட்டி இருவரையும் அழைத்துள்ளனர். யாரும் எந்த பதிலும் அளிக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தப்போது, திடுக்கிட்டனர். அங்கு இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்துக்கு விரைந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவயிடத்தில் ஒரு கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில், புதுமணத் தம்பதிகளின் உடல்கள் அவர்களது வீட்டின் ஒரே அறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இருவரது உடல்களிலும் பல கத்திக்குத்து காயங்கள் இருந்தன. சொல்லப்போனால், இருவரது உடல்களிலும் ஒரே மாதிரியான காயங்கள் இருக்கின்றன. இவர்களது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.

இருவரின் கைரேகைகளும் சேகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விசாரணையை தொடங்கி உள்ளோம். முதல்கட்ட தகவலில், இருவரும் காதலித்து வந்தததும், இதையறிந்த இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைத்ததும் தெரியவந்துள்ளது. இந்த நேரத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது மிகப்பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர்களது உடற்கூராய்வின் முடிவில் உண்மைகள் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வார்த்தை போர் எதிரொலி: இரு பெண் அதிகாரிகளும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

Last Updated : Feb 24, 2023, 9:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.