ராய்ப்பூர் (சத்தீஸ்கர்): போலி அல்லது பொய்யான சாதிச் சான்றிதழ்கள் அளித்து பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களையும் உடனடியாகப் பணியிலிருந்து நீக்குமாறு முதலமைச்சர் பூபேஷ் பாகல் அறிவுறுத்தியுள்ளார்.
மாநிலத்தின் பொது நிர்வாகத் துறையின் கூற்றுப்படி, 2000ஆவது ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலம் உருவான பின்னர், மொத்தம் 758 போலி மற்றும் தவறான சாதிச் சான்றிதழ்கள் இதுவரை பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
அதில் 267 சாதிச் சான்றிதழ்கள் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் பெரும்பாலானவை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நீதிமன்றத்தில் தடைச் சான்றிதழ் பெற்றவர்களைத் தவிர அனைவரையும் பணியிலிருந்து நீக்க முதலமைச்சர் பூபேஷ் சிங் பாகல் உத்தரவிட்டுள்ளார்.
உயர் மட்ட சான்றிதழ் ஆய்வுக் குழு பொது நிர்வாகத் துறையில் 14 பழங்குடியினர் மற்றும் பட்டியல் சாதித் துறையில் 8, வருவாய் துறையில் 7 (பட்டியல் மற்றும் பழங்குடி), பொது சுகாதாரம், குடும்ப நலன் மற்றும் மருத்துவக் கல்வித் துறையில் 9, பொது சுகாதாரப் பொறியியல் துறையில் 8 பேர் போலி சாதிச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
இது தவிர பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் 4, நீர்வளத் துறையில் 14, சமூக நலத்துறையில் 1, பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் 15, வணிக வரித்துறையில் 1, உள்துறை துறையில் 7, கிராமத் தொழில்துறை துறையில் 12, எரிசக்தி துறையில் 7 , வர்த்தக மற்றும் கைத்தொழில் துறையில் 4, திறன் மேம்பாடு, தொழில்நுட்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்பு துறையில் 5, உயர் கல்வித் துறையில் 3, வேளாண் துறையில் 14, நகர நிர்வாகத் துறை மற்றும் வனத்துறையில் தலா 5, கூட்டுறவுத் துறையில் 3, பொதுப்பணித்துறை தலா 2 துறை மற்றும் திட்டமிடல் பொருளாதார மற்றும் புள்ளிவிவரத் துறை 6, கால்நடைத் துறை மற்றும் மீன்வளத்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர்களில் 1 நலத்துறை, பள்ளி கல்வித் துறையில் 44, தலைமைத் தேர்தல் அலுவலர் அலுவலகம், மக்கள் தொடர்புத் துறை மற்றும் வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றில் தலா ஒருவர் என வேலைக்கு சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், சத்தீஸ்கரில் போலி சாதிச் சான்றிதழ் அளித்து அரசு பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்க உத்தரவு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவர் வேஷம் போட்ட பெண்: தக்க நடவடிக்கை எடுத்த போலீஸ்!