ETV Bharat / bharat

Singh Deo: சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியா? - சத்தீஸ்கர் துணை முதலமைச்சர் சிங் தியோ பதில் - சிங் தியோ

சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி வழங்குவது தொடர்பாக தாங்கள் ஆலோசிக்கவில்லை என்றும், முதலமைச்சர் பூபேஷ் பாகலை முன்னிறுத்திதான் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வோம் என்றும் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், புதிதாக நியமிக்கப்பட்ட துணை முதலமைச்சருமான டிஎஸ் சிங் தியோ தெரிவித்துள்ளார்.

DCM Singh Deo
தியோ
author img

By

Published : Jun 29, 2023, 2:23 PM IST

ராய்ப்பூர் (சத்தீஸ்கர்): சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. பூபேஷ் பாகல் முதலமைச்சராக இருக்கிறார். சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி வருகிற 2024ஆம் ஆண்டு ஜனவரியில் முடிவடைகிறது. இதனால், இந்த ஆண்டு இறுதிக்குள் சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக டெல்லியில் நேற்று (ஜூன் 28) காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம் குறித்தும், மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களிடையேயான உட்கட்சிப் பூசல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த கூட்டத்தைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில துணை முதலமைச்சராக மூத்த தலைவர் டிஎஸ் சிங் தியோ நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

முதலமைச்சர் பூபேஷ் பாகலுக்கும், மூத்த தலைவர் டிஎஸ் சிங் தியோவுக்கும் இடையே உட்கட்சிப் பூசல் நிலவி வந்ததாக தகவல் வெளியான நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காங்கிரஸ் தலைமை அதிரடியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், டிஎஸ் சிங் தியோ துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவைப் போலவே சத்தீஸ்கரிலும் தலைவர்கள் இடையிலான மோதலை தீர்த்து வைத்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் டிஎஸ் சிங் தியோ டெல்லியிலிருந்து இன்று காலை சத்தீஸ்கரின் ராய்ப்பூருக்கு வந்தார். ராய்ப்பூர் விமான நிலையத்தில் டிஎஸ் சிங் தியோவுக்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு சிங் தியோ செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சுழற்சி முறையில் தியோவுக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முதலமைச்சர் பதவி வழங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தாங்கள் அது குறித்து பேசவில்லை என்றும், இது ஊடகங்களால் உருவாக்கப்பட்ட சலசலப்பு என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவோம். எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவேன். முதலமைச்சர் பூபேஷ் பாகலை முன்னிறுத்திதான் இந்த தேர்தலை எதிர்கொள்வோம். அனைவரும் இணைந்து செயல்படுவோம். இப்போதைக்கு எனக்கு குறிப்பிட்ட பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை" என்று கூறினார்.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, இரண்டரை ஆண்டுகள் தனக்கு முதலமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என சிங் தியோ கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சத்தீஸ்கர் துணை முதலமைச்சர் அறிவிப்பு... ஜெட் வேகத்தில் போகும் காங்கிரஸ் கட்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.