சத்தீஸ்கர்: ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களின் சட்டசபை காலம் முடிவடைவதை அடுத்து, 5 மாநிலத்தின் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலம் மொத்தம் 90 சட்டப்பேரவைகளைக் கொண்டதால், இரண்டு கட்டங்களாக, அதாவது முதல் கட்டமாக நவம்பர் 7ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக நவம்பர் 17ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.
-
9.93% voter turnout recorded till 9 am in Chhattisgarh and 12.80% in Mizoram. #ChhattisgarhElections2023 #MizoramElection2023 pic.twitter.com/XkG5JYHGpp
— ANI (@ANI) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">9.93% voter turnout recorded till 9 am in Chhattisgarh and 12.80% in Mizoram. #ChhattisgarhElections2023 #MizoramElection2023 pic.twitter.com/XkG5JYHGpp
— ANI (@ANI) November 7, 20239.93% voter turnout recorded till 9 am in Chhattisgarh and 12.80% in Mizoram. #ChhattisgarhElections2023 #MizoramElection2023 pic.twitter.com/XkG5JYHGpp
— ANI (@ANI) November 7, 2023
இந்த நிலையில், இன்று (நவ.7) காலை 7 மணிக்கு சத்தீஸ்கரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இதனையடுத்து, காலை 9 மணி நிலவரப்படி 9.93 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சத்தீஸ்கர் முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 40 லட்சத்திற்கும் அதிகமாக வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
223 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்டத் தேர்தலில் 25 பெண் வேட்பாளர்கள் உள்ளனர். இன்றைய வாக்குப்பதிவுக்காக 5,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாட்டின் விடுதலைக்குப் பின்னர் முதல் முறையாக 126 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியினர் தங்களது வாக்குகளை இம்முறை பதிவு செய்ய உள்ளனர். 2018ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 90 தொகுதிகளில் காங்கிரஸ் 68 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், காவல் துறையினர் உள்பட மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், வாக்குச்சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மிசோரம் சட்டமன்றத் தேர்தல் 2023; வாக்குப்பதிவு தொடங்கியது!