ETV Bharat / bharat

எவரஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழன்.. சென்னை இளைஞர் சாதனை..

சென்னையை அடுத்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் எவரஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 20, 2023, 11:05 PM IST

சென்னை: சென்னை கோவளத்தை சேர்ந்த 27 வயதான ராஜசேகர் ஏப்ரல் 13ம் தேதி எவரஸ்ட் பேஸ் கேம்ப்பில் தனது பயணத்தை துவக்கினார். மே 19ம் தேதி அதிகாலையில் எவரஸ்ட் சிகரத்தின் முழுமையான உயரமான 8850 மீட்டரில் 6850 மீட்டர் உயரத்தை எட்டி சாதனை படைத்துள்ளார். சிகரம் தொட்டபின்னர் பாதுகாப்பாக அவர் பேஸ்கேம்ப்புக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜசேகர் தமிழகத்தின் கடலோர கிராமத்தில் பிறந்த இவர் அலை சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளவில் பல வெற்றிகளைக் குவித்தவர். பிட்னெஸ், அலை சறுக்கு பயிற்சியாளராக இருந்தவருக்கு திடீரௌ மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக ஒரு வருட காலமாக பயிற்சிகள் எடுத்து 6 மலை உச்சிகளில் ஏறி தன்னை எவரெஸ்ட் கனவுக்காக தயார்படுத்திக்கொண்டார். 3 மாத உடற்பயிற்சி, பளி குளிரைத் தாங்க மணாலி சோலங், நேபாள் பகுதிகளில் தங்கி உடலையும், மனதையும் உறுதிப்படுத்திக்கொண்டார்.

தன் மனதையும் உடலையும் தயார் செய்து கொண்டு ஏப்ரல் 13ம் தேதி எவரெஸ்ட் மலையின் Base Campல் பயணத்தை தொடங்கினார், பல தடைகள், தட்பவெப்ப சூழ்நிலைகள், மன உறுதியைக் குலைக்கும் சம்பவங்கள் என பலவற்றைத் கடந்து 6850 மீட்டர் உயரத்தை மே 19ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அடைந்தார். தமிழ்நாட்டில் இருந்து முதல்முறையாக எவரெஸ்ட் உச்சிக்கு சென்ற முதல் நபர் என்ற பெருமையை இவர் தற்போது பெற்றுள்ளார்.

உலகிலேயே மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உச்சியை அடைய வேண்டும் என்பது மலையேற்ற வீரர்கள் மட்டுமில்லாமல் சாதாரண மனிதர்களுக்கும் அது வாழ்நாள் கனவாக இருக்கிறது. உழைப்பும், உறுதியும் இருக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த கனவு நினைவாகிறது, மீதம் உள்ள பலருக்கு அது கனவாகவே சென்று விடுகிறது.

இதையும் படிங்க: DC vs CSK: 'சென்னை அணிக்கு விசில் போடு'... பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.