ETV Bharat / bharat

IPL 2023 - தொடக்க ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் பலப்பரீட்சை!

author img

By

Published : Mar 31, 2023, 1:15 PM IST

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாக தொடங்க உள்ள நிலையில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் - முன்னாள் சாம்பியன் சென்னை அணிகள் மோதுகின்றன.

Etv Bharat
Etv Bharat

அகமதபாத் : 16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்றைய ஆட்டம் நடைபெற உள்ளது.

கடந்த சீசனில் அறிமுகமாகி யாரும் எதிர்பாராத வகையில் கோப்பையை தட்டிச் சென்ற குஜராத் அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் கோப்பை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக களமிறங்க உள்ளது. கடந்த ஆண்டில் விளையாடிய வீரர்களோடு சேர்த்து சிவம் மாவி, கே.எஸ்.பரத், ஒடியன் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை விலைக்கு வாங்கி அணியின் பலத்தை மெருகேற்றி உள்ளது குஜராத் அணி நிர்வாகம்.

இந்தப் பக்கம் 4 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜா, தீபஜ் சாஹர் அம்பத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்களுடன் களம் காணுகிறது. இது போக அதிரடி ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ், ரஹானே உள்ளிட்டோரையும் விலைக்கு வாங்கி சென்னை நிர்வாகம் அணிக்கு பலம் சேர்த்து உள்ளது.

கடந்த ஆண்டு ஆடிய இரு போட்டிகளிலும் குஜராத் அணியிடம் சென்னை அணி தோல்வி அடைந்தது. இதனால் இந்த சீசனில் முதல் போட்டியிலேயே பதிலடி கொடுத்து ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முயற்சியில் சென்னை அணி களமிறங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

குஜராத் அணிக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக பலம் சேர்த்து வரும் நிலையில், சென்னை அணிக்கு கேப்டன் கூல் டோனி பக்கபலமாக இருந்து வருகிறார். இந்த ஆண்டுடன் டோனி கிரிக்கெட்டு முழுக்கு போட உள்ளதாக கதைகள் பரவி வரும் நிலையில், அவரை ஆடுகளத்தில் பார்த்தாக வேண்டும் என ரசிகர்கள் துடியாய் துடித்து வருகின்றனர்.

ஒரு சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியின் சொந்த ஊரிலே அடுத்த சீசனுக்கான தொடக்க ஆட்டம் நடத்தப்பட வேண்டும் என ஐபிஎலில் கடைபிடிக்கப்பட்டு வருவதால், தொடக்க ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் வரை அமர்ந்து பார்க்கும் வசதி நரேந்திர மோடி மைதானத்தில் உள்ளதால் இன்றைய ஆட்டம் களைகட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்நிலையில் தொடக்க ஆட்டத்தில் கேப்டன் டோனி விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. கால் பகுதியில் ஏற்பட்ட லேசான காயம் காரணமாக அகமதாபாத்தில் நடந்த பயிற்சியில் டோனி பங்கேற்கவில்லை. இதனால் முதல் போட்டியில் டோனி பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியானது.

இந்நிலையில் முதல் போட்டியில் டோனி விளையாடுவார் என சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதனை உறுதி செய்யும் விதமாக, தல பத்ரம் என சென்னை அணி ட்வீட் செய்து உள்ளது. இருப்பினும், காயம் காரணமாக டோனி விளையாடாவிட்டால் அவருக்கு பதிலாக ருத்ராஜ் கெய்வாட் கேப்டன் பொறுப்பையும், கான்வே அல்லது அம்பத்தி ராயுடு கீப்பிங் பொறுப்பையும் கவனிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : கொசு விரட்டியால் நேர்ந்த சோகம் - கார்பன் மோனாக்சைடு நச்சை சுவாசித்த 6 பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.