ETV Bharat / bharat

சம்பளம் கேட்ட ஹோட்டல் தொழிலாளியை சிறுநீர் அருந்த வைத்த உரிமையாளர்! - ஹோட்டல் தொழிலாளியை சிறுநீர் அருந்த வைத்த உரிமையாளர்

பெங்களூரு : கர்நாடக மாநிலம், தொட்டடகுடஹள்ளி அருகே சம்பளம் கேட்ட உணவக சமையல்காரரைத் தாக்கி, சிறுநீர் அருந்த வைத்த உரிமையாளரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பளம் கேட்ட ஹோட்டல் தொழிலாளியை சிறுநீர் அருந்த வைத்த உரிமையாளர்!

author img

By

Published : Nov 7, 2020, 12:12 PM IST

கர்நாடக மாநிலம், பெங்களூரு வடக்கு தாலுகாவின் தொட்டடகுடஹள்ளி, ஆச்சார்யா கல்லூரி சாலையில் ஜே கிச்சன் மற்றும் பி.ஜி.ஜே கிச்சன் உணவகம் இயங்கி வருகிறது. இந்த ஜே கிச்சனின் உரிமையாளர் கேரளாவைச் சேர்ந்த ஜி.ஜி.யுஹான். இங்கு, சாஜி (வயது 46) என்பவர் சமயல் வேலை செய்து வருகிறார்.

ஜி.ஜி.யுஹான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாஜியை தனது உணவகத்தில் சமையல்காரராக வேலைக்கு சேர்த்துள்ளார். முதலில், சமையல்காரருக்கும் உரிமையாளருக்கும் நல்ல உறவு இருந்து வந்துள்ளது. ஆனால், கரோனா காலத்திற்குப் பிறகு, இருவருக்குமிடையே சம்பளப் பிரச்னை காரணமாக தகராறு ஏற்படத் தொடங்கியுள்ளது.

கரோனா காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்ததால், ஹோட்டல் இயங்காத நிலையில் சாஜிக்கு சம்பளம் வழங்க முடியாது என உரிமையாளர் ஜி.ஜி.யுஹான் கூறியுள்ளார். இதனால், ஊரடங்கு அமலில் இருந்த மாதங்களைத் தவிர மீதமுள்ள ஒன்பது மாதங்களுக்குண்டான சம்பளத்தை சாஜி கேட்டுள்ளார். இதில், இருவருக்குமிடையே தகராறு முற்றியுள்ளது.

இந்நிலையில், ஜி.ஜி.யுஹானின் மனைவி குறித்து சாஜி தாகாத முறையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஜி.ஜி, தனது நண்பர்களுடன் சேர்ந்து சாஜியைத் தாக்யுள்ளார். பின்னர், சிகரெட்டால் அவரது உடலில் சூடு வைத்து அவரை ஜி.ஜி சித்திரவதை செய்துள்ளார். மேலும், அவரை சிறுநீர் குடிக்க வைத்தும் துன்புறுத்தியுள்ளார்.

இருப்பினும், ஜி.ஜி.யின் மனைவிக்கு ஆபாச செய்திகளை அனுப்பியதால்தான் சாஜியை அவர் தாக்கியதாக ஜி.ஜி.யுஹான் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மதநாயக்கனஹள்ளி காவல் துறையினர், இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவியுடன் தகராறு: தூக்கிட்டு கணவன் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.