ETV Bharat / bharat

உலகிலேயே முதல் முறையாக கண்டங்களுக்கு இடையே இடமாற்றம் செய்யப்பட்ட சிவிங்கிப்புலிகள்... காரணம் என்ன..? - 8 சிவிங்கிப்புகளிகள்

உலகிலேயே முதல்முறையாக கண்டங்களுக்கு இடையே இடமாற்றம் செய்யப்பட்ட 8 சிவிங்கிப்புகளிகள் மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கிப்படுகிறது. அதற்கான காரணங்கள் மற்றும் அவசியம் குறித்த சிறப்புத்தொகுப்பு காணுங்கள்.

cheetahs from namibia to india overview
cheetahs from namibia to india overview
author img

By

Published : Sep 16, 2022, 11:04 PM IST

டெல்லி: உலகம் முழுவதும் வெறும் 7,500 சிவிங்கி புலிகள் மட்டுமே உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை நமீபியா, போட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, அங்கோலா, சாம்பியா, தான்சானியா மற்றும் கென்யாவில் காணப்படுகின்றன. ரோமம் முழுவதும் கறுப்பு நிறப் புள்ளிகளுடனும், கண்களுக்கு கீழே கறுப்பு நிறக் கோடுகளுடனும் மெலிதாக உடலமைப்பை சிவிங்கிப்புலிகள் கொண்டிருக்கும். மணிக்கு 70 மைல் (112 கிமீ) வேகத்தில் ஓடக்கூடிய திறன் வாய்ந்தது. பதுங்கிப் பாய்ந்து உணவை வேட்டையாடும் பழக்கமுடையது.

அழிந்துவரும் உயிரினமாகக் கருதப்படும் இந்த சிவிங்கிப்புலிகள் இந்தியாவில் 1967ஆம் ஆண்டு முதன் முதலில் காணப்பட்டன. அதன்பின் கடைசியாக சத்தீஸ்கா் மாநில வனப்பகுதியில் 1947ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறுத்தைகள் முற்றிலும் அழிந்துவிட்டதாக 1952ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. வேட்டையாடுதல், குறைந்து வரும் வாழ்விடம், உணவு சங்கிலியில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் அழிந்துபோனதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் வனம் மற்றும் புல்வெளி சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மீட்டமைக்கவும், பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கவும் சிவிங்கிப்புலிகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. அந்த வகையில் இந்தாண்டு ஜூலை மாதம் ஆப்பிரிக்க நாடான நமீபியா உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்ததின் படி 74 ஆண்டுகளுக்கு பின் 8 சிவிங்கிப்புலிகள் நமீபியா நாட்டில் இருந்து விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டன. இந்த சிவிங்கிப்புலிகளை மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப் 17) விடுக்க உள்ளார்.

வனஉயிரின பாதுகாப்பு மற்றும் நிலையான உயிரி பல்லுயிர் பயன்படுத்துதல் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய அரசும், நமீபியா குடியரசு அரசும் கையெழுத்திட்டன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளும் பயனடையும் வகையில் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.

• சிறுத்தைகள் எந்த பகுதிகளில் முன்னர் அழிந்ததோ, அதே இடங்களில் அவற்றை மீண்டும் கொண்டு வருவது மற்றும் உயிரி பல்லுயிரின் பாதுகாப்பது.

• இரு நாடுகளிலும் சிறுத்தையின் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக நிபுணத்துவங்களை பகிர்வது மற்றும் பரிமாறிக் கொள்வது.

• தொழில்நுட்ப செயல்பாடுகள், வன உயிரின வாழ்விடங்களில் வசிக்கும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகள் மற்றும் உயிரி பல்லுயிரின் நிலையான மேலாண்மை ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி வனஉயிரின பாதுகாப்பு மற்றும் நிலையான உயிரி பல்லுயிரைப் பயன்படுத்துதல்.

• பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் ஆளுகை, சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் மதிப்பீடுகள், மாசு மற்றும் கழிவு மேலாண்மை மற்றும் பரஸ்பர விருப்பமுள்ள இதர துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது.

• தேவையேற்படும் விஷயங்களில் நிபுணத்துவத்தை பகிர்வது உள்ளிட்ட வனஉயிரின மேலாண்மையில் பயிற்சி மற்றும் கல்விக்காக வல்லுநர்களைப் பரிமாறிக் கொள்வது.

இதுகுறித்து மத்திய அரசு தரப்பில், சிவிங்கிப்புலிகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வருவது என்பது சம அளவிலான பாதுகாப்பு விளைவுகளை ஏற்படுத்தும். சிறுத்தையின் மறுசீரமைப்பு என்பது, சிறுத்தைகளின் உண்மையான வாழ்விடங்கள் மற்றும் அவற்றின் பல்லுயிரை மீட்டெடுக்கும் முன்மாதிரி முயற்சியின் ஒரு பகுதியாகும். இது, பல்லுயிரின் சீரழிவு மற்றும் விரைவான இழப்பைத் தடுக்க உதவும். பெரிய அளவிலான கால்நடைகளைத் தாக்காமல், மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இல்லாமல் இருக்கும் காரணத்தால், மாமிச விலங்குகளுக்கு மத்தியில் மனிதர்களுக்கும் சிவிங்கிப்புலிகளுக்கான முரண்பாடு மிகக் குறைவாகவே உள்ளது.

வேட்டையாடும் உயிரினங்களுள் முதன்மை வகிக்கும் சிவிங்கிப்புலியை மீண்டும் கொண்டு வருவது வரலாற்று பரிணாம சமநிலையை மீட்டெடுக்கிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலின் பல்வேறு நிலைகளில் இதனுடன் தொடர்புடைய மாற்றங்கள் ஏற்படும். மேம்பட்ட மேலாண்மை மற்றும் வன உயிரினங்களின் வாழ்விடங்கள் மறுசீரமைப்பு (புல்வெளிகள், தாவர நிலங்கள் மற்றும் வனங்களின் திறந்த வெளிப்பகுதிகள்), சிவிங்கிப்புலியின் இரையைப் பாதுகாத்தல் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள உயிரினங்களைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் அமைப்புகளின் கீழ்நிலை உணவு சங்கிலி வரம்பில் பன்முகத்தன்மையை நிலை நிறுத்தி, மேம்படுத்தும் சுற்றுச்சூழலியலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

மிகப்பெரிய வேட்டையாடும் விலங்கு போன்றவற்றிற்கு இந்த முயற்சி வழிவகை செய்யும். தலைசிறந்த வேட்டையாடும் விலங்காக தனது பணியை மேற்கொள்ள வழிவகை செய்யும் வகையில் இந்தியாவில் சாத்தியமுள்ள சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கையை உருவாக்கி, வரலாற்று ரீதியாக சிறுத்தையின் விரிவாக்கத்திற்கு போதிய இடமளித்து அதன் மூலம் சர்வதேச பாதுகாப்பு முயற்சியில் பங்கேற்பதே சிறுத்தை மறுஅறிமுகத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

2010 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்கு இடையே 10 இடங்களுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் தொகை, மரபியல் மற்றும் சமூக- பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரங்களைப் பொறுத்து, குறிப்பிட்ட இனங்களை மறுஅறிமுகம் செய்வதற்கு சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் (ஐ.யு.சி.என்) வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்தியாவில் சிறுத்தைகளைக் கொண்டு வருவதற்கு சாதகமான இடங்கள் மதிப்பீடு செய்யப்பட்டதில், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் ஆசிய சிங்கங்களை மறுஅறிமுகம் செய்வதற்காக இந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஏராளமான முதலீடுகள் செய்யப்பட்ட காரணத்தால், குறைந்த மேலாண்மை இடையீடுகளில் சிறுத்தைகளைக் கொண்டு வர இந்த இடம் ஏதுவாக இருக்கும் என்று கருதப்பட்டது.

பல்வேறு வழிகளுள் மிகச்சிறந்தவற்றைத் தேர்வு செய்யும் மாதிரியைப் பயன்படுத்தி இந்தியாவில் மாதிரி இடங்களைப் பயன்படுத்த சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல்- பருவநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களுடன், தென்னாப்பிரிக்காவில் சிறுத்தைகள் வசிக்கும் பகுதிகள் (தென் ஆப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வே) பயன்படுத்தப்பட்டன. சிவிங்கிப்புலிகளின் வாழ்விடங்களுக்கு உகந்ததாகவும், தென் ஆப்பிரிக்காவில் உள்ள சிவிங்கிப்புலிகளின் தட்பவெப்ப நிலைக்கு இணையாகவும் இந்தியாவின் குனோ தேசிய பூங்கா உள்ளது என்பதை ஆய்வுகள் காட்டின.

இதனை கருத்தில் கொண்டு சிவிங்கிப்புலிகளை இடமாற்றம் செய்வதற்கான செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டது. இந்தியாவில் சிறுத்தை மறுஅறிமுகத் திட்டத்திற்குத் தேவையான நிதி மற்றும் நிர்வாக உதவியை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வாயிலாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வழங்கியது. இந்திய வனஉயிரின கழகம், தேசிய மற்றும் சர்வதேச மாமிச விலங்குகள்/ சிறுத்தை நிபுணர்கள்/ முகமைகள் ஆகியவை இந்த திட்டத்திற்கு தொழில்நுட்ப மற்றும் அறிவு சார்ந்த உதவியை அளித்துள்ளது.

சிவிங்கிப்புலிகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான கண்காணிப்பை குனோ தேசிய பூங்காவும், ஆராய்ச்சிக்கான கண்காணிப்பை சிவிங்கிப்புலி ஆராய்ச்சிக் குழுவும் மேற்கொள்ளும். உள்ளூர் கிராம மக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக பல்வேறு பிரச்சாரங்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன. கிராமத் தலைவர்கள், உள்ளூர் தலைவர்கள், ஆசிரியர்கள், சமூகப் பணியாளர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனத்தினருக்கு பாதுகாப்பு பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துள்ளது.

வனத்துறையினரின் பல்வேறு திட்டங்கள் பற்றி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கிராமங்களில் எடுத்துரைப்பதற்கு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுத்தை- மனித இடையீடு குறித்து மக்களிடை புரிதல் ஏற்படும். இந்தியாவில் மீண்டும் சிவிங்கிப்புலிகள் புத்துயிர் பெரும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: "அம்பேத்கரும் மோடியும்" நூல் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.