ETV Bharat / bharat

அதிகார அத்துமீறல்: காரிலிருந்து இறங்கிவந்து இளைஞரை அறைந்த எம்எல்ஏ!

தெலங்கானாவைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் வழியில் சென்றபோது எழுந்து நின்று மரியாதை கொடுக்காத இளைஞனை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்மினார்  எம்எல்ஏ
சார்மினார் எம்எல்ஏ
author img

By

Published : Dec 13, 2021, 4:58 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் சார்மினார் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் மும்தாஜ் அகமது கான். இவர் சனிக்கிழமை இரவு (டிசம்பர் 11) சார்மினார் பேருந்து நிலையம் அருகே காரில் சென்றுகொண்டிருந்தபோது உள்ளூர்வாசியான குலாம் கவுஸ் ஜிலானி என்பவர் அவர் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்.

இதைக் கண்ட எம்எல்ஏ உடனே காரிலிருந்து இறங்கிவந்து ஏன் எழுந்து நின்று மரியாதை கொடுக்கவில்லை எனக் கேட்டு இளைஞனை கன்னத்தில் அறைந்துள்ளார். இந்தக் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட இளைஞன் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் சட்டப்பேரவை உறுப்பினர் மும்தாஜ் அகமது கான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: சிபிஎஸ்இ கேள்வித்தாளில் பிற்போக்கு கருத்துகள் - சு. வெங்கடேசன் எம்பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.