ETV Bharat / bharat

பிகாரில் கள்ளச்சராயம் குடித்தவர்கள் உயிரிழப்பு - பலருக்கு கண் பாதிப்பு! - Liquor Poisonous in bihar

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் சிலர் உயிரிழந்துள்ள நிலையில், பலருக்கும் கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிகாரில் கள்ளச்சராயம் குடித்தவர்கள் உயிரிழப்பு - பலருக்கு கண் பாதிப்பு!

author img

By

Published : Aug 5, 2022, 12:50 PM IST

சரண் (பிகார்): பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள மேக்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனன்பூர் கிராமத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) மத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பலரும் உள்ளூர் சாராயத்தை அருந்தியுள்ளனர். இது பலருக்கும் கண் பாதிப்புகளை முதலில் ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையிலும், இரண்டு பேர் சாராயம் அருந்திய இடத்திலும் உயிரிழந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பலர், பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சாப்ரா சதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம் இந்த இறப்பிற்கான காரணத்தை கண்டறிய மருத்துவர்கள் குழு பனன்பூர் கிராமத்திற்கு சென்றுள்ளதாக மாவட்ட மாஜிஸ்டிரேட் ராஜேஷ் மீனா கூறியுள்ளார்.

இதையும் படிங்க: குஜராத் போலி மதுபானம்.. பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு... 2 எஸ்பிக்கள் பணியிடமாற்றம்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.