ETV Bharat / bharat

சந்திரயான்-3 விக்ரம் லேண்டரை படம் பிடித்த சந்திரயான்-2 ஆர்பிட்டர்! - What is Chandrayaan3

Chandrayaan-2 takes a photograph of Chandrayaan-3: நிலவை சுற்றி வரும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் தற்போது நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை படம் பிடித்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவத்து உள்ளது.

Chandrayaan-2 takes a photograph of Chandrayaan-3
சந்திரயான்-3 லேண்டரை படம்பிடித்த சந்திரயான்-2 ஆர்பிட்டர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 6:30 PM IST

டெல்லி: நிலவை சுற்றி வரும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் தற்போது நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டுள்ள சந்திரயான்-3 லேண்டரை படம் பிடித்து அனுப்பி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. செப்டம்பர் 6ஆம் தேதி சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள இரட்டை அதிர்வெண் செயற்கை ரேடார் (DFSAR) கருவி மூலம் படம்பிடிக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 லேண்டர் நிலவின் மென்மையான தரையிறக்கத்திற்காக, சந்திரயான்-2 ஆர்பிட்டர் உடன் இருவழி இணைப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நாசா (NASA) விண்கலம் லூனார் ரெசொன்னைசன்ஸ் ஆர்பிட்டர் (LRO) சந்திரயான்-3 தரையிறங்கிய தளத்தினையும், சந்திரயான்-3 லேண்டரையும் படம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரயான்-3 லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டது.

சந்திரயான்-2 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதற்கு முன்பு விபத்துக்குள்ளானது. இதனையடுத்து 4 ஆண்டுகளுக்கு பின், சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் இந்தியா மிகப்பெரிய வரலாற்று சாதனை படைத்தது. மேலும் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.

இதையும் படிங்க: ஆதித்யா எல்1 செல்பி கிளிக்கை வெளியிட்ட இஸ்ரோ!

நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடுகளில் இந்தியா நான்காவது இடம் பெற்றது. இதற்கு முன்பு அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கி இருந்தன. அதேநேரத்தில் நிலவின் தென் துருவத்தில் களமிறங்கிய முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் நிலவின் மேற்பரப்பில் கந்தகம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பதை கண்டறிந்தது. மேலும் நிலவின் வெப்ப நிலையையும் பதிவு செய்தது. மேலும், பல்வேறு ஆய்வுகளை நிலவின் மேற்பரப்பில் செய்தது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான்-3ன் முக்கிய நோக்கமாக நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கம் செய்யப்பட்டு விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை நிலவின் மேற்பரப்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தனது அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக முடித்து தற்போது உறக்கநிலையில் (Sleeping Mode) உள்ளது. மீண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை மீண்டும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விக்ரம் லேண்டரின் முதல் 3டி புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.