ETV Bharat / bharat

டீசல் லாரியும், சரக்கு லாரியும் மோதி விபத்து - 9 பேர் பலி - போலீசார் விசாரணை

டீசல் லாரியும், சரக்கு லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

chandrapur
chandrapur
author img

By

Published : May 20, 2022, 6:47 PM IST

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் நகரின் புறவழிச்சாலையில், நேற்று (மே 19) இரவு டீசல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியும், மரக்கட்டைகள் ஏற்றிச்சென்ற சரக்கு லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் டீசல் லாரியில் இருந்த இருவரும், சரக்கு லாரியில் இருந்த 7 பேரும் என மொத்தம் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், மரம் ஏற்றிச்சென்ற சரக்கு லாரியில் இருந்த 7 பேரில், ஒருவர் ஓட்டுநர், 6 பேர் தொழிலாளர்கள் என்றும், இவர்கள் தோஹோகான் கோத்தாரி பகுதியிலிருந்து மரங்களை ஏற்றிக்கொண்டு சந்திராப்பூர் சென்றிருந்ததாகவும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: புனேயில் இருவேறு இடங்களில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.