ETV Bharat / bharat

மழையில் காதல் கணவரோடு சாந்தினி ஐஏஎஸ் - லவ் ஸ்டோரி 2016 - சாந்தினி ஐஏஎஸ்

2016ஆம் ஆண்டு தன் கணவரோடு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து, ஒரு சுவாரஸ்யமான காதல் கதையை சொல்லியிருக்கிறார் சாந்தினி ஐஏஎஸ்.

Chandni  IAS officer
Chandni IAS officer
author img

By

Published : Jul 1, 2021, 9:55 PM IST

2015ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணி தேர்வை எழுதிவிட்டு, ஒரு மழைநாளில் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார் சாந்தினி சந்திரன். தேர்வு முடிவை நினைத்து பதற்றப்படாமல் இருக்க, தனது நண்பர் அருண் சுதர்ஷன் என்பவரோடு அந்த மழையில் வெளியே சென்றிருக்கிறார்.

தேர்வில் வெற்றி பெற்றவர்கள் புகைப்படங்கள் செய்தித்தாளில் வெளியாகியிருக்கின்றன. அதில் தனியார் செய்தித்தாள் ஒன்று இவர்கள் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அந்த தனியார் நிறுவனத்துக்கு அழைத்து புகார் செய்த அருண் சுதர்ஷன், பின்னாளில் சாந்தினியின் காதல் கணவராகிப் போனார். இதுகுறித்து சாந்தினி, அப்போது எங்கள் திருமணம் நடக்கவில்லை. குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் என் புகைப்படமும் இடம்பெறும் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால், நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் காதலை சென்றடைந்தேன்.

  • May 10, 2016.Results of Civil Service Exam 2015 was expected to be out & I was roaming with @mrarunsudarsan to not stress over it. I didn't make it. Next day newspapers were filled with pics of toppers & @timesofindia published this pic of us! Arun called ToI & complained (1/3) pic.twitter.com/mYaemtmm5t

    — Chandni Chandran (@chandni_ias) June 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். சமீபத்தில் அந்த புகைப்படம் குறித்து எனக்கு ஞாபகம் வந்தது. அருணிடம் கேட்டேன், அவர் உடனடியாக அந்த புகைப்படக் கலைஞரை ராகேஷ் நாயரை தொடர்புகொண்டு பேசினார், புகாரளித்ததால் எங்களை எளிதில் நினைவில் வைத்திருந்தார். ராகேஷ் அந்த புகைப்படத்தை அனுப்பி வைத்தார். அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது என குறிப்பிட்டுள்ளார்.

சாந்தினி தற்போது வடக்கு திரிபுராவில் உள்ள கஞ்சன்பூரில் துணை பிரிவு மாஜிஸ்திரேட்டாக உள்ளார்.

இதையும் படிங்க: சாதிய பாகுபாடு: உதவிப் பேராசிரியர் பணி விலகலுக்கு ஐஐடி விளக்கமளிக்க மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.