ETV Bharat / bharat

நண்பரின் தாயார் உயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன்! - கரோனா நோயாளிகள்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள தனது நண்பரின் தாயார் உயிரைக் காப்பாற்றுவதற்காக சண்டிகரிலிருந்து மருந்து ஏற்பாடு செய்துவந்த சம்பவம் மருத்துவர்களிடையே நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பரின் தாயார் உயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன்

author img

By

Published : May 16, 2021, 9:17 AM IST

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியைச் சேர்ந்தவர் சாஹில் சிங் ரத்தோர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் பாலி என்பவரும் நெருங்கிய நண்பர்கள்; இருவரும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர்.

சமீபத்தில், சாஹிலின் தாயார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆல்வாரிலுள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அவரது நிலையைப் பார்த்த மருத்துவர்கள், சாஹிலிடம் தொற்றை விரட்டியடிக்கும் ரெம்டெசிவிர் என்னும் மருந்தை ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினர்.

இதனையறிந்த சாஹிலின் நண்பர் அர்ஜுன், நண்பரின் தாயாரை கரோனாவிலிருந்து மீட்பதற்காக ரெம்டெசிவிர் என்னும் மருந்தை வாங்கிக் கொண்டு பஞ்சாப் மாநிலம் சண்டிகரிலிருந்து சுமார் 8 மணி நேரத்தில், 420 கி.மீ., பயணம் செய்து மருத்துவர்களிடம் மருந்தை ஒப்படைத்தார்.

இதையடுத்து, சாஹிலின் தயாருக்கு மருந்து செலுத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். நண்பரின் தாயார் உயிரைக் காப்பாற்ற போராடிய அர்ஜுனுக்கு பல அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:முதலமைச்சர் பாராட்டிய ஆட்டோ ஓட்டுநர்கள் - மக்கள் சேவைக்கு கிடைத்த அங்கீகாரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.