டெல்லியில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், பொருளாதாரம் பெருமளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதையடுத்து, மத்திய அரசின் பொது விநியோகத் திட்டமான பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா மூலம் கூடுதலாக உணவு தானியங்கள் வழங்கப்படுள்ளன.
இந்தத் திட்டத்தின் மூலம் இன்றுமுதல் (மே 1) 80 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக ஐந்து கிலோ உணவு தானியங்களை மாதந்தோறும் விநியோகிக்கத் தயாராகிவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் மலிவு விலையில் உணவு: தமிழிசை தொடங்கிவைப்பு