ETV Bharat / bharat

புதிய ட்ரோன் சட்டம் 2021 குறித்து மத்திய அரசு தகவல் - Ministry of Civil Aviation

சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம், ட்ரோன் பயிற்சிக்கான தேவைகளை பரிந்துரைத்து, ட்ரோன் பள்ளிகளைக் கண்காணித்து, இணையத்தில் பைலட் உரிமங்களை வழங்கும்.

Centre notifies new Drone Rules 2021
Centre notifies new Drone Rules 2021
author img

By

Published : Aug 26, 2021, 7:55 PM IST

டெல்லி: ஆளில்லா விமான அமைப்புக்கான புதிய சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அதற்கு பதிலாக தாராளமயமாக்கப்பட்ட ட்ரோன் விதிகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி ட்ரோன்களை இயக்க பதிவு செய்வதற்கு எந்த பாதுகாப்பு சான்றிதழும் தேவையில்லை. ட்ரோன்களை இயக்குவதற்கான அனுமதி கட்டணம் கட்டுபடியாகக் கூடிய வகையில் இருக்கும் என சிவில் விமான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாராளமயமாக்கப்பட்ட ட்ரோன் விதிகளில் முக்கியமானவை:

ட்ரோன்களை அளவை வைத்து கட்டணம் வசூலிக்கப்படாது. பசுமை மண்டலங்களில் ட்ரோன்களை இயக்க எந்த அனுமதியும் தேவையில்லை.

அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் பள்ளிகளில் இருந்து தொலைதூர ரிமோட் சான்றிதழ் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் தொலைதூர பைலட் உரிமத்தை சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் வழங்கும்.

இந்திய ட்ரோன் நிறுவனங்களில் வெளிநாட்டு உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு இல்லை.

விதிகள் 2021-இன் கீழ் இயங்கும் ட்ரோன்கள், 300 கிலோவில் இருந்து 500 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. வாடகை ட்ரோன்களுக்கும் இது பொருந்தும். விதிகளை மீறிய குற்றத்திற்கான உச்சபட்ச அபராத தொகை ரூ. 1 லட்சமாகக் குறைப்பு.

சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம், ட்ரோன் பயிற்சிக்கான தேவைகளை பரிந்துரைத்து, ட்ரோன் பள்ளிகளைக் கண்காணித்து, இணையத்தில் பைலட் உரிமங்களை வழங்கும்.

வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்குமுறை அமைப்பிற்கு வழிவகை செய்யும் வகையில் கல்வித்துறை, புதிய நிறுவனங்கள் மற்றும் இதர பங்குதாரர்களின் பங்களிப்புடன் கூடிய ட்ரோன் ஊக்குவிப்பு கவுன்சிலை அரசு அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டது குறித்து டெல்லி பல்கலை விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.