நாட்டின் கோவிட்-19 தொற்று நிலவரம் குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரக உயர் அலுவலர்கள் செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டனர். இதில் மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் நிலவம் கோவிட்-19 தொற்று தீவிரத்தன்மை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் தற்போது சிகிச்சையில் உள்ள 53% கோவிட்-19 நோயாளிகள் இந்த இரு மாநிலங்களில்தான் பதிவாகியுள்ளனர். நிலைமையை உணர்ந்து இரு மாநிலங்களுக்கும் மத்திய ஆய்வுக்குழு அனுப்பப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை செயலர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மக்கள் கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என தெரிவித்த அவர், கோவிட்-19க்கு எதிரானப் போர் இன்னும் நிறைவடையவில்லை. எனவே மாவட்ட நிர்வாகங்கள் தொடர்ந்து கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 42 ஆயிரத்து 766 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 13,563 பேருக்கும், அதற்கடுத்து மகாராஷ்டிராவில் 8,992 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2024க்குள் 60,000 கிமீ நெடுஞ்சாலை: அமைச்சர் நிதின் கட்கரி இலக்கு!