ETV Bharat / bharat

கூட்டாட்சி தத்துவத்தின் மீது தாக்குதல் நடத்தும் பாஜக - கெஜ்ரிவால் தாக்கு!

மேற்கு வங்க நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிட்டு, கூட்டாட்சி தத்துவத்தின் மீது மத்திய பாஜக அரசு தாக்குதல் நடத்துவதாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

author img

By

Published : Dec 18, 2020, 12:28 PM IST

Centre encroaching on rights of states: Kejriwal on transfer of three IPS officers from WB

டெல்லி: மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு (2021)நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், தேர்தல் பணி குறித்து விவாதிக்கும் நோக்கிலும், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா மேற்குவங்க மாநிலத்திற்குச் சென்றிருந்தார். அப்போது, அவரது வாகனம் உள்பட பாஜகவின் முக்கிய தலைவர்களின் வாகனங்களின் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது.

மத்திய அரசின் செயலுக்கு மம்தா மறுப்பு

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாநிலத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு குறித்து நேரில் விளக்கம் அளிக்க தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சம்மனுக்கு மேற்கு வங்க அரசு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து சம்பவம் நடைபெறும்போது, அங்கு பொறுப்பிலிருந்த எஸ்பி போலாநாத் பாண்டே, எடிஜி ராஜீவ் மிஸ்ரா, டிஐஜி பிரவீன் குமார் திரிபாதி ஆகியோர் மத்திய அரசு பணிக்காக அழைக்கப்பட்டனர்.

இதற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மறுப்பையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்.

  • I condemn the Centre’s blatant interference in the Bengal administration. Encroaching on the rights of states by attempting to transfer police officers to Centre just before elections, is an assault on federalism and an attempt to destabilize. https://t.co/sbxpZl0Nn2

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) December 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பாஜக அரசுக்கு கெஜ்ரிவால் கண்டனம்

இந்தநிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வங்க தேச மாநிலத்தின் நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு சில காலத்திற்கு முன்னதாக காவல்துறை அலுவலர்களை மத்திய அரசு மாற்ற முயற்சிக்கிறது. இதன் மூலம் மாநிலங்களின் உரிமைகளை மீறுவது கூட்டாட்சி மீதான தாக்குதலாகத் தெரிகிறது. மேலும், பாஜக அரசு தங்களது பலத்தை நிரூபிக்க முயற்சி செய்வதாகவும் தெரிகிறது" என்றார்.

இதையும் படிங்க: ஐபிஎஸ் அலுவலர்களை மத்திய அரசு பணிகளுக்காக அனுப்ப முடியாது - மம்தா திட்டவட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.