சர்வதேச நாடுகளிடமிருந்து பெறப்பட்டு மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்ட கரோனா நிவாரணம் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிட்-19 பெருந்தொற்று இரண்டாம் அலையில் இந்தியா சிக்கித் தவிக்கும் நிலையில், உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. குறிப்பாக, இந்தியாவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பெருமளவில் உள்ளதால், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆக்ஸிஜன் சிலிண்டர், கான்சென்ட்ரெடர்கள் ஆகியவற்றை வழங்கி உதவி வருகின்றன.
இந்த சர்வதேச உதவிகளை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பெருந்தொற்றால் சிக்கித் தவித்துவரும் மாநில அரசுகளுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து வந்துள்ள நிவாரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 11,325 ஆக்ஸிஜன் கான்சென்ட்ரெடர்கள், 11,325 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 19 ஆக்ஸிஜன் உற்பத்திக் கருவிகள், 8,256 வென்டிலெட்டர்கள், சுமார் 6.1 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'லிவ்விங் டூ கெதரை ஏற்க முடியாது' - பாதுகாப்பு கோரிய காதலர்களுக்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் பதில்