டெல்லி: நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துவருகிறது. இதன்காரணமாக மத்திய, மாநில அரசுகள் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திவருகிறது. குறிப்பாக டெல்லி, கேரளா, மகாராஷ்டிராவில் கரோனா தொற்று பாதிப்பு சற்று அதிமாக பதிவாகிவருகிறது.
இதனால் மத்திய சுகாதார செயலளார் ராஜேஷ் பூஷன், அந்தந்த மாநில சுகாதார செயலளார்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்தாலோசித்தார். அப்போது, கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும், குறிப்பாக கரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்குமாறு வலியுறுத்தினார்.
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 305 பேருக்கும், கேரளாவில் 1255 பேருக்கும், மகாராஷ்டிராவில் 1373 பேருக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் கடந்த வார தொடக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை 100-க்குள் இருந்த நிலையில் இன்று (ஜூன் 17) 589 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சோனியா காந்திக்கு பூஞ்சை தொற்று - காங்கிரஸ் அறிக்கை!