ETV Bharat / bharat

தமிழ்நாட்டில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.3,691 கோடி ஒதுக்கீடு - ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங்

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ஒன்றிய அரசு ரூ.3,691 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

Centre allocates Rs.3,691 Crore grants to Tamil Nadu under Jal Jeevan Mission
தமிழ்நாட்டில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.3,691 கோடி ஒதுக்கீடு
author img

By

Published : Jun 15, 2021, 7:53 PM IST

டெல்லி: ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு முதல் தவணையாக ரூ.614.35 கோடியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டுக்கு ஜல்ஜீவன் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை 4 மடங்கு உயர்த்த ஒப்புதல் அளித்துள்ள ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங், 2024ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராம வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க தமிழ்நாட்டிற்கு முழு உதவியும் அளிக்கப்டும் என உறுதி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் குடிநீர் குழாய் இணைப்பு

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 1.26 வீடுகளில், 40.36 லட்சம் வீடுகளுக்கு (31.80 விழுக்காடு) குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கியபோது, 21.65 லட்சம் (17.06 விழுக்காடு) வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் கடந்த 22 மாதங்களில் 18.70 லட்சம் (14.74 விழுக்காடு) வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்னும் 86.53 லட்சம் வீடுகள் குடிநீர் குழாய் இணைப்பு இல்லாமல் உள்ளன. இந்தாண்டில் 16.13 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மீதமுள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது மிகப் பெரிய பணியாக இருக்கும்.

தமிழ்நாடு அரசு சுணக்கம்

2024ஆம் ஆண்டுக்குள் இந்தப் பணியை முடிக்க, கிராமங்கங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதை தமிழ்நாடு 179 விழுக்காடு அதிகரிக்க வேண்டும்.

இந்தாண்டுக்கான செயல் திட்டத்தை தமிழ்நாடு இன்னும் இறுதி செய்யவில்லை. இதை தாமதிக்காமல் இறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசை தேசிய ஜல்ஜீவன் திட்டம் கேட்டுக் கொண்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டம் அமல்படுத்தும் பணியை விரைவுபடுத்தும்படி தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.

இதுவரை ஒதுக்கப்பட்ட தொகை

2020-21ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு வழங்கிய ரூ.921.99 கோடியில், தமிழ்நாடு ரூ.544.51 கோடியை மட்டும் பயன்படுத்தியது. ரூ.377.48 கோடியை திருப்பி அளித்தது. இந்தாண்டு 4 மடங்கு அதிகமாக ரூ.3,691 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செலவழிக்காத நிலுவைத் தொகையாக ரூ.377.48 கோடி உள்ளது.

2020-21ஆம் ஆண்டில் மாநிலத்தின் பங்களிப்பு பற்றாக்குறையாக ரூ. 290.79 கோடி உள்ளது. 2021-22ஆம் ஆண்டில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க தமிழ்நாட்டுக்கு ரூ.8,428.17 கோடி உள்ளது. ஆகையால், இத்திட்டத்துக்கு பணப் பற்றாக்குறை எதுவும் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சருக்கு, ஒன்றிய அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டின் மூலம், கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் தமிழ்நாடு அரசால் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கிராமங்களுக்கு முன்னுரிமை

2021-22ஆம் ஆண்டில், 15வது நிதி ஆணையத்தின் மானியமாக ஊரக உள்ளாட்சி பகுதிகளில் குடிநீர் மற்றும் துப்புரவு பணிக்கு ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.8,436 கோடி உறுதி அளிக்கப்பட்ட நிதி உள்ளது. தமிழ்நாடு கிராமப் பகுதிகளில் செய்யப்படும் இந்த மிகப் பெரிய முதலீடு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, கிராம பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள கிராம பகுதிகள், பட்டியலின, பழங்குடியின மக்கள் அதிகம் உள்ள கிராமங்கள், தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க பிரதமர் வலியுறுத்தியுள்ளதையும், தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.