ETV Bharat / bharat

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பர்காஷ் சிங் பாதல் மறைவுக்கு 2 நாள் அரசு துக்கம் - பிரதமர் மோடி அஞ்சலி!

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பர்காஷ் சிங் பாதல் மறைவையொட்டி இரண்டு நாடுகள் நாடு தழுவிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது. சண்டிகர் விரைந்த பிரதமர் மோடி பர்காஷ் சிங் பாதல் உடலுக்கு மரியாதை செலுத்துகிறார்.

Parkash Singh Badal
Parkash Singh Badal
author img

By

Published : Apr 26, 2023, 10:46 AM IST

சண்டிகர் : மறைந்த பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பர்காஷ் சிங் பாதல் (வயது 95) உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார். பஞ்சாபில் 5 முறை முதலமைச்சராக இருந்தவர் பர்காஷ் சிங் பாதல். சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரான பர்காஷ் சிங் பாதல், இரைப்பை அழற்சி மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சினைகளால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவரை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்து இருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பர்காஷ் சிங் பாதல் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பர்காஷ் சிங் பாதல் மறைவுக்கு நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கபடும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 1957 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பர்காஷ் சிங் பாதல் தனது 30 வயது சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குறைந்த வயதில் முதலமைச்சர் பதவி வகித்தவர் என்ற சிறப்பையும் பர்காஷ் சிங் பாதல் தன் வசம் வைத்து உள்ளார். தனது 43 வது வயதில் பர்காஷ் சிங் பாதல் பஞ்சாப் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். தனது 70 ஆண்டு கால அரசியல் வரலாற்றி இரு முறை மட்டுமே தோல்வியை தழுவினார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து தீவிர அரசியலில் இருந்து பர்காஷ் சிங் பாதல் சற்று தனித்தே காணப்பட்டார். இந்நிலையில் உடல் நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

பர்காஷ் சிங் பாதல் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள இரங்கல் குறிப்பில், ஸ்ரீ பர்காஷ் சிங் பாதல்-ஜியின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்திய அரசியலின் மகத்தான ஆளுமை அவர். மேலும் நமது தேசத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய குறிப்பிடத்தக்க அரசியல்வாதியும் கூட. பஞ்சாப்பின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்ததுடன், நெருக்கடியான காலங்களில் மாநில நலன்களை காத்தவர்.

ஸ்ரீ பர்காஷ் சிங் பாதலின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. நான் பல ஆண்டுகளாக அவருடன் நெருக்கமாகப் பழகி வந்தேன். குறிப்பாக அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் சிரோமணி அகாலிதளம் தொண்டர்களுக்கும் எனது இரங்கல்கள்" என தெரிவித்து உள்ளார். சண்டிகர் விரைந்த பிரதமர் மோடி, பர்காஷ் சிங் பாதலின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

முன்னாள் முதலமைச்சர் பர்காஷ் சிங் பாதலின் மறைவை அடுத்து புதன்கிழமை அரசு விடுமுறை அளித்து பஞ்சாப் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் அனைத்து அரசு பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. லம்பியில் உள்ள பாதல் கிராமத்தில் வைத்து பர்காஷ் சிங் பாதலின் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : இந்திய மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்தில் கலப்படம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.