இந்தியாவில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகிறது. சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் ஆகிய இரண்டையும் பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் இதுவரை 65 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளது. இதில் 97 விழுக்காட்டினர் தடுப்பூசி செலுத்தியப் பின் எந்தவித தொந்தரவும் இல்லாமல் திருப்திகரமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட 65 லட்சம் பேரில் எட்டுப் பேருக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டு அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை இந்த பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களுக்கு ஏற்கனவே இருந்த நாள்பட்ட நோய் காரணமாகவே இந்த மரணம் நிகழந்துள்ளது எனக் கூறினார்.
அனைத்து முன்களப் பணியாளர்களும் தங்கள் விவரங்களை கோ-வின் இணைதளத்தில் வரும் 20ஆம் பதிந்துகொள்ள வேண்டும் எனவும், மார்ச் மாதத்திற்குள் அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பதவியேற்று ஓராண்டு நிறைவு: 275 பெண்களுக்கு காப்பீட்டு தொகை செலுத்திய ஊராட்சி தலைவர்!