ETV Bharat / bharat

மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு? - central university UG

டெல்லி: மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மத்திய பல்கலைக்கழகம்
மத்திய பல்கலைக்கழகம்
author img

By

Published : Apr 9, 2021, 12:25 PM IST

Updated : Apr 9, 2021, 1:23 PM IST

மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள 41 மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் வரும் ஜூன் மாத இறுதிக்குள் நுழைவுத் தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நுழைவுத்தேர்வு தொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சகத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில், மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை மற்றும் பி.எச்.டி படிப்புகளுக்கு உயர்தர திறனாய்வு தேர்வு நடத்த பரிந்துரைத்துள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு CUCET எனப்படும் நுழைவுத் தேர்வை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் எனவும், ஆண்டுக்கு இரண்டு முறை நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் எனவும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் நுழைவுத் தேர்வு வரும் ஜூன் மாதம் நடத்தப்படும் என மத்திய உயர் கல்வித் துறைச் செயலர் அறிவித்துள்ளார். முடிவுகள் ஜூலை மாதத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தேசியக் கல்விக் கொள்கையில் இளநிலை படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வுகள் என்ற அம்சம் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு மத்தியப் பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டால், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை மட்டுமே வைத்து கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்படும்.

Last Updated : Apr 9, 2021, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.