ஜெட்டா : ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நடைபெறும் உள்நாட்டு போரால் ஸ்தம்பித்து காணப்படும் சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷ் காவேரி திட்டத்தின் மூலம் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு வசதியாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சூடான் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நடைபெற்ற போர் நிறுத்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து 72 மணி நேர போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்த நேரத்தில் சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. அவ்வகையில் சூடானில் மீட்கப்பட்ட 278 இந்தியர்கள் கொண்ட முதல் குழு, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மூலம் புறப்பட்டு ஜெட்டா வந்தடைந்தனர். மேலும் இந்திய விமானப் படையின் இரண்டு விமானங்கள் மூலம் 250 இந்தியர்கள் இரண்டாவது கட்டமாக மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆபரேஷ் காவேரி திட்டத்தின் மூலம் இதுவரை 530 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. சூடானில் நடைபெறும் உள்நாட்டு போரில் சிக்கி ஏறத்தாழ 3 ஆயிரம் இந்தியர்கள் அவதியுற்று வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
-
A second C-130 flight reaches Jeddah bringing 135 passengers from Sudan.#OperationKaveri moving steadily forward. pic.twitter.com/JvwKgelnqN
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) April 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A second C-130 flight reaches Jeddah bringing 135 passengers from Sudan.#OperationKaveri moving steadily forward. pic.twitter.com/JvwKgelnqN
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) April 25, 2023A second C-130 flight reaches Jeddah bringing 135 passengers from Sudan.#OperationKaveri moving steadily forward. pic.twitter.com/JvwKgelnqN
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) April 25, 2023
கடந்த செவ்வாய்க்கிழமை ஆபரேஷ் காவிரி திட்டத்தின் மூலம் இந்திய கப்பல் படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பலில் 278 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். தொடர்ந்து சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை சுமந்து கொண்டு இந்திய விமானப் படையின் C130J heavy-lift போக்குவரத்து விமானம் சூடான் துறைமுகத்தை அடைந்தது.
இந்த விமானத்தில் 121 இந்தியர்கள் மீட்கப்பட்டதாகவும், அதை தொடர்ந்து இயக்கப்பட்ட மற்றொரு C130J வகை இந்திய விமானப் படையின் விமானம் மூலம் 135 இந்தியர்கள் மீட்கப்பட்டதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இரண்டு விமானங்களும் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரை அடைந்த நிலையில் அங்கிருந்து சொந்த நாட்டிற்கு இந்தியர்களை அழைத்து செல்லும் பணி நடைபெற்று வருவதாக வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
-
#OperationKaveri - the next step.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) April 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The first C-130 lands flight lands in Jeddah with another 121 passengers. They will be reaching home soon. pic.twitter.com/uzjTwGxjFy
">#OperationKaveri - the next step.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) April 25, 2023
The first C-130 lands flight lands in Jeddah with another 121 passengers. They will be reaching home soon. pic.twitter.com/uzjTwGxjFy#OperationKaveri - the next step.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) April 25, 2023
The first C-130 lands flight lands in Jeddah with another 121 passengers. They will be reaching home soon. pic.twitter.com/uzjTwGxjFy
மீட்பு பணிகளை ஆய்வு செய்ய மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு சென்று உள்ளார். இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் சூடானில் சிக்கி உள்ள தங்கள் நாட்டினரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிங்க : இந்திய மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்தில் கலப்படம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!