ETV Bharat / bharat

அமைச்சரின் சிடி வழக்கு: 3 காங்கிரஸ் தலைவர்களின் பெயரைக் குறிப்பிட்டு புதிய வீடியோ வெளியீடு! - பாலியல் புகார்

பெங்களூரு: மாஜி அமைச்சரின் சிடி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

CD Case
மாஜி அமைச்சர் சிடி வழக்கு
author img

By

Published : Mar 26, 2021, 12:59 AM IST

பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏவும், கர்நாடக அமைச்சருமான ரமேஷ் ஜர்கிஹோலி கடந்த சில நாள்களுக்கு முன்பு பாலியல் புகார் ஒன்றில் சிக்கினார். இது தொடர்பான காணொலியை சமூக செயற்பாட்டாளர் ஒருவர் வெளியிட்டிருந்தார். இவ்விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து ரமேஷ் ஜர்கிஹோலி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தன்மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான புகார்களைச் சிலர் வேண்டுமென்று கூறுவதாக அமைச்சர் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக அமைச்சரின் வழக்கறிஞர் எம்.வி. நாகராஜ் புகார் ஒன்றையும் அளித்தார். இவ்வழக்கு தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்திவருகிறது. அமைச்சருக்கு எதிராகக் கொடுக்கப்பட்டுள்ள சிடி ஆதாரத்தில் உள்ள குரல் மாதிரிகளைச் சோதனை செய்துள்ளனர். மேலும், சிடி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை எஸ்ஐடி அலுவலர்கள் தேடிவருகின்றனர்.

இந்நிலையில், சிடியில் இடம்பெற்றிருந்த பெண், மூன்று காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு புதிய காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, "நான் கடத்தப்பட்டிருப்பதாக என் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அவர்கள் விருப்பத்துடன் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் நான் எந்த தவறும் செய்யவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். எனது பெற்றோருக்குத் தகுந்த பாதுகாப்பு அளித்த பின்னரே எஸ்ஐடி முன்பு விசாரணைக்கு ஆஜராகுவேன். எனக்குப் புரியவில்லை, எஸ்ஐடி யாருடைய பக்கம் உள்ளது? யாரைப் பாதுகாக்க முயற்சிக்கிறது?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, கேபிசிசி தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் ஆகியோர் அவரது பெற்றோருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையும் படிங்க: நலத்திட்டம் என்றால் பாஜக, ஊழல் என்றால் மம்தா - அமித் ஷா பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.