புதுச்சேரி: காரைக்கால் மாவட்டம், தமிழ்நாடு எல்லைப்பகுதியான அம்பகரத்தூரில் இருந்து காரைக்கால் நோக்கி தனியார் பேருந்து இயக்கிக்கொண்டிருக்கும்போது செல்லூர் அருகே ஓட்டுநர் ஐயப்பனுக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது.
அதனை அறிந்து சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் ஐயப்பன் அருகில் இருந்த கடையில் பேருந்தை மோதி நிறுத்தியுள்ளார். இதில் ஓட்டுநர் உட்பட 40 பேர் பயணம் செய்தனர். பேருந்து கடையில் மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தனக்கு வலிப்பு வந்ததை சுதாரித்துக்கொண்டு சாமர்த்தியமாக செயல்பட்டு தன்னை நம்பி, பேருந்தில் பயணம் செய்த பயணிகளை காப்பாற்ற முயற்சித்த ஓட்டுநரின் செயலால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
பேருந்தை ஓட்டிக்கொண்டிருக்கும் போதே ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்படும் காட்சி, பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அது தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இதையும் படிங்க:கிராமசபைக்கூட்டத்தில் நெகிழ்ச்சி; தூய்மைப்பணியாளர்கள் காலில் விழுந்த ஊராட்சித்தலைவர்