ETV Bharat / bharat

ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - CCTV Footage Of Train Accident

ஒடிசாவில் ரயில் வருவதை அறிந்து வேகமாக தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞர் மீது ரயில் ஏறி விபத்திற்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

CCTV Footage Of Youth Being Killed In Train Accident In Sambalpur

author img

By

Published : Mar 4, 2021, 2:46 PM IST

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் அதிவிரைவாக வந்துகொண்டிருந்த ரயில் மோதி விபத்திற்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் காட்சியில் பாலத்திற்கு அருகே ஆளில்லா ரயில்வே கிராசிங் அருகே ரயில் வருவதையறிந்த மக்கள் சிலர் வேகமாக ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றது தெரிகிறது.

இதைப் பார்த்த நபர் ஒருவர் ரயில் தூரத்தில் வருவதாக எண்ணி, வேகமாக தண்டவாளத்தைக் கடக்க எண்ணியுள்ளார். ஆனால், அவர் பாதி தண்டவாளத்தைக் கடக்கும்போதே அதிவேகமாக வந்த ரயில் அவர் மீது ஏறியது.

இந்த விபத்தில் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில் அந்தப் பகுதியைக் கடக்க அதிகபட்சம் மூன்று நிமிடங்களே ஆகியிருக்கும். ஆனால், இவர் ரயில் வருவதை அறிந்தும் சில நிமிடங்களுக்குள்ளாக தண்டவாளத்தைக் கடக்க முயன்றதில் தனது உயிரையே பறிகொடுத்துள்ளார்.

இதுபோன்ற ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளில் அதிக பாதுகாப்புடனும், பொறுமையுடனும் மக்கள் செயல்படாமல் இருப்பதாலே பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.