சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்வது தொடர்பான பொது நல வழக்குகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஜுன் 3ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள மதிப்பெண் மதிப்பீடு முறையை 2 வாரங்களுக்குள் தெரிவிக்க சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ-க்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இன்று(ஜுன்.17), பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.
- 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 5 பாடங்களில் பெற்ற மதிப்பெண்களில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள் கணக்கில் கொள்ளப்படும்.
- 11ஆம் வகுப்பு பாடங்களில் 30% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்
- 12ஆம் வகுப்பு பாடங்களில் 40% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்
- செய்முறைத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்
மதிப்பெண் கணக்கீட்டை ஏற்காத மாணவர்கள் கரோனா பெருந்தொற்று குறைந்த பிறகு, தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட் வரும் ஜூலை 31ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சர்ச்சையை கிளப்பிய திருவள்ளுவர் புகைப்படம்: காணாமல் போன காவி உடை!