கரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகள் அதிகரித்துவருகின்றன.
இதையடுத்து, சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்தன. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, கல்வித் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, மே 4 முதல் ஜூன் 14ஆம் தேதிவரை நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதேபோல், மே 4ஆம் தேதி தொடங்கவிருந்த 12ஆம் வகுப்புத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.