ETV Bharat / bharat

நில மோசடி வழக்கில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன்!

நில மோசடி வழக்கில் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன்
தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன்
author img

By

Published : Mar 11, 2023, 1:07 PM IST

பிகார்: லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது, நில மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டினர். குறிப்பாக ரயில்வே வேலை வாங்கி தருவதற்கு நிலம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதில், வேலை பெற்றவர்கள் தங்களின் நிலங்களைப் பரிசாகவோ, குறைந்த விலைக்கோ, லாலு பிரசாத் குடும்பம் மற்றும் பினாமி பெயர்களில் எழுதி தருவதாகவும், இதன் மூலம் கோடிக் கணக்கில் மோசடி நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாட்னா மற்றும் டெல்லியில் லாலுவுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (மார்ச் 10) சோதனை மேற்கொண்டனர். இதில், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் கணக்கில் அடங்காத பல லட்சம் ரூபாய் பணமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகின.

இந்நிலையில், இது தொடர்பாகத் தேஜஸ்வி யாதவிடம் விசாரணை நடத்த உள்ளதாகக் கூறிய சிபிஐ, கடந்த மாதம் 4ஆம் தேதி தேஜஸ்விக்குச் சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதால், மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தெலங்கானா முதல்வர் கேசிஆர் மகள் கவிதா அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.