ETV Bharat / bharat

தமிழகத்திற்கு காவிரி நீர் தர எதிர்ப்பு..! போராட்டத்தில் குதித்த கன்னட அமைப்புகள்! பந்த் அறிவிப்பு! - கர்நாடக பந்த்

Karnataka Bandh : தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.

Karnataka
Karnataka
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 12:14 PM IST

மாண்ட்யா : தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநிலம் மாண்ட்யாவில் விவசாய மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. கர்நாடக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம் மனு மீதான விசாரணையை நிராகரித்தது.

அதேபோல் 24 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் இருந்து திறந்து விடக் கோரிய தமிழக அரசின் மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டிய கட்டாயத்தில் கர்நாடக அரசு நிர்பந்திக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக விவசாயிகள் மற்றுன் கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. கர்நாடகாவின் மாண்ட்யா மாவட்டத்தில் விவசாய மற்றும் கன்னட அமைப்புகள் கலவர போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன. கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன.

முன்னதாக ஹிதரக்ஷா சமிதி அமைப்பின் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் தமிழகத்திற்கு தண்ணீர் தரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளனர். இன்று (செப். 23) காலை வழக்கம் போல் காய்கறி, பால், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்ட நிலையில், விவசாய மற்றும் கன்னட அமைப்பினர் கடைகளை மூடினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் மாண்ட்யா மாவட்டத்தில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். ஆட்டோ ஓட்டுநர்கள், தனியார் வாகன உரிமையாளர்கள், ஸ்டூடியோ உரிமையாளர்கள், மாவட்டத்தின் அனைத்துத் தரப்பு மக்களும், மாணவர் அமைப்பினர், விவசாய அமைப்புகள், முற்போக்கு அமைப்பினர், கன்னட அமைப்பினர் தானாக முன்வந்து பந்த் போராட்டத்தில் ஈடுபட்டு ஆதரவு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

மாண்டியா, மத்தூர், மளவள்ளி, ஸ்ரீரங்கப்பட்டணா, பாண்டவபூர், கே.ஆர்.பேட்டை, நாகமங்கலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனைகளுக்கு விசா வழங்க சீனா மறுப்பு! கிரண் ரிஜிஜூ கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.