ETV Bharat / bharat

தேசிய கீதம் அவமதிப்பு: மம்தா பானர்ஜி மீது வழக்கு - மம்தா பானர்ஜி மும்பை சுற்றுப்பயணம்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேசிய கீதத்தை அவமதித்ததாக மும்பையைச் சேர்ந்த பாஜக முக்கியப் பிரமுகர் பிரவின் தரேகர் புகார் அளித்துள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, Case filed against Mamata Banerjee
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
author img

By

Published : Dec 2, 2021, 1:18 PM IST

மும்பை: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சமீபத்தில் மூன்று நாள் பயணமாக மும்பை வந்திருந்தார். மும்பை பயணத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார்.

அப்போது அவர் பங்கேற்ற நிகழ்வின் இறுதியில் தேசிய கீதத்தைப் பாடிய மம்தா பானர்ஜி, முதல் நான்கு, ஐந்து வரிகளுக்குப் பின் முழுமையாகப் பாடாமல், பாதியில் நிறுத்திவிட்டார் என மேற்கு வங்க பாஜக குற்றஞ்சாட்டியிருந்தது.

  • Our national anthem is one of the most powerful manifestation of our national identity. The least people holding public office can do is not demean it.

    Here is a mutilated version of our national anthem sung by Bengal CM. Is India’s opposition so bereft of pride and patriotism? pic.twitter.com/wrwCAHJjkG

    — Amit Malviya (@amitmalviya) December 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது தொடர்பாக பாஜகவின் ட்விட்டர் பக்க பதிவில் தேசிய கீதம் அவமதிப்புத் தொடர்பான மம்தாவின் அந்தக் காணொலி இணைக்கப்பட்டுள்ளது. வங்கத்தின் கலாசாரத்தையும், தேசிய கீதத்தையும், இந்த நாட்டையும், ரவீந்திரநாத் தாகூரையும் ஒரு முதலமைச்சராக மம்தா அவமதித்துள்ளார் எனவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, பாஜக தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மால்வியா மம்தாவின் குறிப்பிட்ட காணொலியை ட்விட்டரில் பகிர்ந்து தனது கண்டனத்தைப் பதிவுசெய்தார்.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த பாஜக முக்கியப் பிரமுகர் பிரவின் தரேகர், மம்தா பானர்ஜி தேசிய கீதத்தை அவமதித்ததாக அவர் மீது புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: Bhima Koregaon case: சுதா பரத்வாஜுக்குப் பிணை - 8 பேருக்கு மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.