டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச உணவு தானியங்கள் திட்டம் அடுத்த நான்கு மாதங்களுக்கு நீட்டித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 80 கோடி அட்டை தாரர்களுக்கு மாதம் 5 கிலோ தானியம் அடுத்தாண்டு மார்ச் வரை இலவசமாக வழங்கப்படஉள்ளது.
Free foodgrains scheme: கரோனா தொற்று காலத்தில் ஏழை, எளிய மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, ரேஷன் கடைகளில் மானிய விலையில் வாங்கப்படும் தானியத்துக்கு மேல், கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் வரும் 30ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இன்று நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Farm Laws: வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்பு - ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்