டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தி விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவித்து, மகரிஷி வால்மீகி பன்னாட்டு விமான நிலையம், அயோத்தியாதம் என பெயர் வைப்பதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று (ஜனவரி 5) ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
महर्षि वाल्मीकि अंतरराष्ट्रीय हवाईअड्डा #अयोध्या धाम का हाल ही में आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी द्वारा उद्घाटन किया गया।
— Airports Authority of India (@AAI_Official) January 4, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">महर्षि वाल्मीकि अंतरराष्ट्रीय हवाईअड्डा #अयोध्या धाम का हाल ही में आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी द्वारा उद्घाटन किया गया।
— Airports Authority of India (@AAI_Official) January 4, 2024महर्षि वाल्मीकि अंतरराष्ट्रीय हवाईअड्डा #अयोध्या धाम का हाल ही में आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी द्वारा उद्घाटन किया गया।
— Airports Authority of India (@AAI_Official) January 4, 2024
கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தி விமான நிலையத்தை திறந்து வைத்தார். தற்போது பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அயோத்தி விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள குறிப்புகளில், ராமாயணத்தை இயற்றிய முனிவர் வால்மீகியை மரியாதை செலுத்தும் விதமாகவும், கலாச்சாரத் தொடர்பை ஏற்படுத்தவும் அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி பன்னாட்டு விமான நிலையம், அயோத்தியாதம் என பெயர் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகளவில் அயோத்தியை புனித யாத்திரை மையமாகவும், மிகப்பழமையான கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும், வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளுக்காகவும், மேலும் அயோத்தியின் பொருளாதாரத்தை உயர்த்தவும் அயோத்தி விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அந்தஸ்து உயர்த்துவதற்காக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக, விமான நிலையத்தின் செயல் திறன் மற்றும் நகரத்தின் வரலாற்று முக்கியத்துவம் ஆகியவற்றைக் கொண்டு மகரிஷி வால்மீகி பன்னாட்டு விமான நிலையம், அயோத்தியாதம் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்வாதி மாலிவால் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிப்பு!