ETV Bharat / bharat

நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.143 உயர்வு!

நெல், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட விவசாய விளைப் பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 143 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

Cabinet
நெல்
author img

By

Published : Jun 7, 2023, 8:38 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று(ஜூன் 7) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதாரம், உட்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அதேபோல், இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளின் கீழ் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 143 ரூபாய் உயர்த்தி அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Biporjoy Cyclone: அரபிக் கடலில் 'பிப்பர்ஜாய்' புயல்.. எங்கெங்கெல்லாம் மழை பெய்யும்.. வானிலை மையம் வெளியிட்ட அப்டேட்!

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவையில், விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் (CACP - Commission for Agricultural Costs and Prices)-ன் பரிந்துரைகள் அடிப்படையில் விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அவ்வப்போது நிர்ணயம் செய்து வருகிறோம். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு விலை நிர்ணயம் அதிகமாக உள்ளது.

கடந்த 2022-23ஆம் ஆண்டில் நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 2,040 ரூபாயாக இருந்தது. தற்போது, 2023-24ஆம் ஆண்டில் இது குவிண்டாலுக்கு 143 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 2,183 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின்படி 'ஏ' ரக நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு 2,203 ரூபாயாக உயர்ந்துள்ளது.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துக்களான நிலக்கடலைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 9 சதவீதமும், எள்ளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 10.3 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. நீளமான பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 10 சதவீதமும், நடுத்தர பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 8.9 சதவீதமும், பச்சைப் பயிறுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 10.4 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. சில்லறை பணவீக்கம் சரியும் போக்கு இருக்கும் இந்த நேரத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பால் விவசாயிகள் பயனடைவார்கள்" என்று கூறினார்.

இதையும் படிங்க: MP Train Accident: மத்தியப்பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. ஒரு வாரத்தில் நிகழ்ந்த ரயில் சம்பவங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.