டெல்லி: சிறப்பு எஃகு இரும்பு உற்பத்தி திட்டத்திற்கு ஊக்கத்தொகை வழங்கிட ரூ.6,322 கோடி ரூபாய், ஒன்றிய அமைச்சரவை ஒதுக்கியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், "சிறப்பு எஃகு இரும்பு தொழில்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.6,322 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியா பல்வேறு வகையான எஃகு வகைகளை உற்பத்தி செய்கிறது. ஆனால், சிறப்பு எஃகு விஷயத்தில் பின்னால் இருக்கிறோம். நாட்டில் அதன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு எஃகு தேவைகளைப் பூர்த்தி செய்ய இறக்குமதியைச் சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது.
இறக்குமதியைக் குறைப்பதற்காக உள்நாட்டு மட்டத்தில் திறனை அதிகரிக்க ரூ. 6,322 கோடி தர ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நாட்டில் புதியதாக 5.25 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, லடாக்கில் பல்கலைக்கழகம் அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமைச்சரின் அறிக்கையை கிழித்து எறிந்த திருணாமுல் எம்.பி., - நாடாளுமன்றத்தில் கடும் அமளி!