ETV Bharat / bharat

மத்திய பிரதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து - 13 பேர் உயிரிழப்பு - Khalghat of Dhar district in MP

மத்திய பிரதேசத்தில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Major Accident in Madhya Pradesh, Major Accident in Madhya Pradesh
Major Accident in Madhya Pradesh
author img

By

Published : Jul 18, 2022, 11:34 AM IST

Updated : Jul 18, 2022, 7:37 PM IST

இந்தூர்: மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள கால்கட் நகரில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 13 பேர் உயிரிழந்திருப்பதாக இந்தூர் ஆணையர் பவன் குமார் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இறந்தவர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் கவிழ்ந்த பேருந்து - 13 பேர் உயிரிழப்பு

40 பேர் பயணித்த அந்த பேருந்து, மத்திய பிரதேசத்தின் இந்தூரில் இருந்து மகாராஷ்டிராவின் புனே நகர் நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தவறான திசையில் இருந்த வந்த வாகனத்தில் மோதுவதை தவிர்ப்பதற்காக பேருந்தை திருப்பியபோது, பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுப்பாலத்தில் பேருந்து கவிழந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் இரங்கல்: விபத்து குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,"மத்திய பிரதேச மாநிலம், தார் பகுதியில் நடந்த பேருந்து விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • The bus tragedy in Dhar, Madhya Pradesh is saddening. My thoughts are with those who have lost their loved ones. Rescue work is underway and local authorities are providing all possible assistance to those affected: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) July 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தொடர்ந்து, இதுகுறித்து மத்திய பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா,"இந்தூரில் இருந்து புனே நோக்கி சென்றுகொண்டிருந்த மகாராஷ்டிர அரசு பேருந்து கால்கட் நகரில் விபத்துக்குள்ளானது. ஆக்ரா - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப்பாலத்தில் உடைத்துக்கொண்டு ஆற்றில் கவிழ்ந்துள்ளது" என தெரிவித்தார்.

இதுதொடர்பாக மகாராஷ்டிரா போக்குவரத்து துறை, "இன்று காலை மத்திய பிரதேசம் இந்தூர் நகரில் இருந்து மகாராஷ்டிராவின் ஜல்கானில் உள்ள அமல்னர் நகரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அமல்னர், விபத்து நடந்த தார் நகரில் இருந்து 260 கி.மீ தொலைவில் உள்ளது" என தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் சிவராஜ் சிங் தகவல்: மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களின் உறவினர்களிடம் சேர்க்க மத்திய பிரதேச அரசு அனைத்து உதவிகளை செய்யும் என சிவராஜ் சிங், ஏக்நாத் ஷிண்டேவிடம் உறுதியளித்தார் என ம.பி., அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மீட்புப்பணியை மேற்பார்வை செய்ய மாநில அமைச்சர்களை விபத்து பகுதிக்கு அனுப்பியுள்ளதாகவும் சிவராஜ் சிங் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மகாராஷ்டிர அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

பேருந்து குறித்த தகவல்கள்: இந்த பேருந்து 10 ஆண்டுகள் பழைமையானது என்றும் இந்தாண்டு ஜூலை 27ஆம் தேதி அதன் உரிமம் காலவதியாக உள்ளது என்றும் மகாராஷ்டிரா போக்குவரத்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், மாசு கட்டுப்பாடு சான்றிதழ் (PUC) மற்றும் காப்பீடு சான்றிதழ் ஆகியவை சரியாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

உதவி எண் அறிவிப்பு: விபத்துக்குள்ளான பேருந்தை சந்திரகாந்த் ஏக்நாத் பாட்டீல் என்பவர் ஓட்டியுள்ளார் என்றும் பிரகாஷ் சர்வான் சௌத்ரி நடத்துனராக இருந்துள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்த உதவி பெறவும், பேருந்தில் இருந்தவர்களின் உறவினர்கள் குறித்தும் அறிய 022-23023940 என்ற இலவச உதவி அலைபேசி எண்ணையும் மகாராஷ்டிர போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பள்ளத்தில் விழுந்த தாய் மற்றும் குட்டி யானையை மீட்ட வனதுறையினர்

Last Updated : Jul 18, 2022, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.