கர்நாடகா- ஆந்திரா இடையே தனியார் பேருந்துகள் தினந்தோறும் சென்று வருகின்றன. இந்நிலையில், இன்று (மார்ச் 19) கர்நாடகாவில் இருந்து ஆந்திரா நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது, துமக்கூரு மாவட்டம் பாவகடா தாலுகாவிலுள்ள பாலவல்லி காட் என்னும் இடத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புக் குழு மற்றும் காவல் துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும், 25 பேர் பலத்த காயமடைந்து கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கைது