இதுதொடர்பாக மாநிலங்களவை செயலகம் வெளியிட்ட உத்தரவில், '2021-22ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, இந்த அமர்வு கடந்த ஜனவரி 29ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற அவைகளில் விவாதம் நடைபெற்று வந்தது.
இந்த பட்ஜெட் கூட்டுத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 15ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டிருப்பினும், அவை வரும் பிப்ரவரி 13ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில், நாளை (பிப். 13) மாநிலங்களவையின் அமர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, மாநிலங்களவையில் நாளை அமர்வு இருக்காது.
பட்ஜெட் கூட்டுத்தொடரின் இரண்டாம் அமர்வு வரும் மார்ச் 8 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறும். பட்ஜெட் அமர்வு தொடங்குவதற்கு முன்பு அனைத்து உறுப்பினர்களும் கரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் எனக் கூறப்பட்டிருந்தது.