புதுடெல்லி : குடியரசுத் தலைவர் மீதான உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் 12 மணிக்கும் மேல் நீடித்தது. மாநிலங்களவையை பொருத்தவரை எந்தவொரு இடையூறும் இன்றி நகர்ந்தது. அந்த வகையில் 100 சதவீதம் பட்ஜெட் கூட்டத்தொடரில் உள்ள நேரத்தை மேல் சபை முழுமையாகப் பயன்படுத்தியது.
முன்னதாக 2022ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி அமர்வு ஜன.31 முதல் பிப்.11 வரையிலும், இரண்டாம் பகுதி அமர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
நாட்டிற்கு நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் 48 பில்லியன் டாலர் முதலீடு வந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் உலக முதலீட்டாளர் சமூகம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு சான்றாகும் எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியிருந்தார்.
மேலும், நாட்டில் உயர்ந்துவரும் ஏற்றமதி குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு இன்று 630 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. நமது ஏற்றுமதியும் பல கடந்த கால சாதனைகளை முறியடித்து வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் நமது சரக்கு ஏற்றுமதி 300 பில்லியன் டாலர்களாக (தோராயமாக 22 லட்சம் கோடிக்கு மேல்) இருந்தது. தற்போது, 2020இல் இது ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) பதிலளிக்கிறார்.
இதையும் படிங்க : ராகுல் காந்தி கோயில் செல்ல நாங்கள்தான் காரணம்- ஜெ.பி. நட்டா!