2021-22ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் தனது நிதிநிலை அறிக்கை உரைகளில் திருக்குறள், புறநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களை மேற்கோள்காட்டுவது வழக்கம்.
அந்த வகையில் இன்றைய உரையிலும், வரி விதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்விதமாக, திருக்குறள் ஒன்றை மேற்கோள்காட்டினார்.
இறைமாட்சி அதிகாரத்தில் உள்ள குறள் எண் 385-ஐ மேற்கோள்காட்டி நிதியமைச்சர் பேசினார்.
குறள்
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.
பொருள்
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசின் நிதி வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுகாத்து திட்டமிட்டுச் செலவிடுவதே, திறமையான ஆட்சிக்கு இலக்கணமாகும்.
இதையும் படிங்க: நாட்டின் பொருளாதார நிலை என்ன? தலைமைப் பொருளாதார ஆலோசகருடன் சிறப்பு நேர்காணல்