காஸியாபாத்(உத்தரப்பிரதேசம்): பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தொண்டர் ஒருவருக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத் சட்டப்பேரவைத்தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) வேட்பாளர் கே.கே.சுக்லாவின் வாக்கு எண்ணிக்கை மைய முகவராக அங்கித் யாதவ் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்தார். இதனை அடுத்து அவரை அங்கிருந்தவர்கள் சுகாதாரத்துறை குழுவின் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே அங்கு வாக்கு எண்ணிக்கை தற்போது வரையில் நடைபெற்று வருகிறது. மேலும், யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்த பாஜகவின் (BJP) அதுல் கர்க் மற்றும் சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த பாஜக முன்னாள் தலைவர் கிரிஷன் குமார் சுக்லாவிற்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவிய நிலையில், அதுல் கர்க் முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதையும் படிங்க: Election Results Live: நான்கு மாநிலங்களில் பாஜக முன்னிலை, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வரலாற்று வெற்றி